எச்சரிக்கை! இந்த 4 இடங்களில் தெரியாமல் கூட ஃபோட்டோ எடுத்துவிடாதீர்கள்!

avoid-taking-photos
avoid-taking-photos
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

ன்றைய காலகட்டத்தில் எல்லோருமே ஃபோட்டோ எடுப்பதில் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். பிறந்த குழந்தை முதல் இறந்தவரின் பிணம் வரை எல்லாவற்றையும் ஃபோட்டோ எடுத்து அதை ரீல்ஸில் போடுவதென்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உங்களுக்குத் தெரியுமா, ஒரு சில இடங்களில் நின்று கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் ஃபோட்டோ எடுக்க கூடாதென்று? ஆன்மீக ரீதியாக சில இடங்களில் இருந்து போட்டோ எடுக்கக்கூடாது என பரிந்துரைக்கப்படுகிறது.

ஆன்மீகத்தின் படி புகைப்படம் எடுப்பது தொடர்பாக சில இடங்களில் கட்டுப்பாடுகள் அல்லது தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மத, கலாச்சார, ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையில் ஆன்மீகத்தின்படி புகைப்படம் எடுக்கக்கூடாத முக்கியமான நான்கு இடங்களை பற்றி பதிவில் பார்க்கலாம்.

கோவில் கருவறை:

கோவில்களின் கருவறையில் மூலவர் சிலை அமர்ந்திருக்கும் இடம் மிகவும் புனிதமானது. இதை புகைப்படம் எடுப்பது பெரும்பாலான கோவில்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தெய்வத்தின் ஆன்மீக ஆற்றலை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. கருவறைக்கு முன்பாக புகைப்படம் எடுப்பது கருவறையில் உள்ள மூலவரை புகைப்படம் எடுப்பதால் கடவுளின் மேலிருக்கும் பக்தியும் மரியாதையும் குறைவதாக கருதப்படுகிறது.

அதைப் போலவே, யாகம், ஹோமம், அபிஷேகம் போன்ற சடங்குகள் நடைபெறும் இடங்களில் புகைப்படம் எடுப்பது என்பது ஆன்மீக சக்தியை சிதறடிக்கும் என்றும் கருதப்படுகிறது. இது புனிதத்தை குறைப்பதாகவும், சடங்கின் கவனத்தை திசை திருப்ப கூடியதாகவும் கருதப் படுகிறது.

இதையும் படியுங்கள்:
அழகும் ஆரோக்கியமும்: கோடை காலத்திற்கு ஏற்ற திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
avoid-taking-photos

கோபுரங்கள்:

கோபுரங்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை உடையவை. அதனால்தான் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் கோபுரங்கள் உயரமாகவும், கூம்பு வடிவிலும் வடிவமைக்கப்படுகின்றன. இதுபோன்ற இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இது உங்கள் சக்தியை உறிஞ்சுவது மட்டுமல்லாமல் எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. அதேபோல் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால், அவர்களின் எதிர்மறை ஆற்றலானது உங்கள் பக்கம் ஈர்க்கக்கூடும்.

மயானம்:

சவக்கிடங்குகள் அல்லது மயானம் ஆகிய இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த இடங்கள் மரணத்துடன் தொடர்புடைய இடங்கள் என்பதால், இங்கு சென்று புகைப்படம் எடுப்பது துரதிஷ்டத்தை தரும் என்றும், இறந்தவர்களின் ஆன்மாவை தொந்தரவு செய்யலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் மயானத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கலாம் என்றும், ஆன்மீக சமநிலையை பாதிக்கும் என்றும் மதங்களில் கூறப்படுகிறது.

குகை, லிஃப்ட் மற்றும் சுரங்கப்பாதை:

சுரங்கப்பாதை அல்லது குகை நுழைவாயிலுக்கு அருகில் புகைப்படம் எடுக்கும்போது அது எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. இங்கு புகைப்படங்கள் எடுத்தால் உங்கள் ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்திலும் தாக்கம் ஏற்படலாம். அதேபோல் லிஃப்ட் மற்றும் பேஸ்மெண்ட் போன்ற இடங்களில் புகைப்படம் எடுப்பது நல்லதல்ல. இது போன்ற இடங்களில் இருக்கும் எதிர்மறை சக்திகள் புகைப்படம் எடுப்பதன் மூலம் உங்கள் உடலில் நுழையலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் நீங்கள் ஃபோட்டோ எடுப்பதை தவிர்க்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்! கோபத்தை நொடியில் கட்டுப்படுத்த இதோ 9 டிப்ஸ்!
avoid-taking-photos

மேற்கூறிய இடங்களை நினைவில் வைத்து கொண்டு முடிந்த வரை அந்த இடங்களில் ஃபோட்டோ எடுப்பதை தவிர்க்கவும். பொதுவாகவே நம் முன்னோர்கள் ஃபோட்டை எடுப்பதை அந்த காலத்தில் தவிர்த்தார்கள் காரணம் இதுதான், மேலும் ஃபோட்டோ எடுக்கும்போது வெளியேறும் ரேடியேஷன் காரணமாக நம்முடைய ஆயுளும் குறையலாமென முன்னோர்கள் கருதினார்கள். ஆகவே, ஃபோட்டோ எடுப்பதை குறைத்து கொள்வதுதான் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

logo
Kalki Online
kalkionline.com