அழகும் ஆரோக்கியமும்: கோடை காலத்திற்கு ஏற்ற திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

summer-curtains-for-home
summer-curtains-for-home
Published on

வீட்டிற்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுப்பதில் திரைச்சீலைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் கோடைக்கேற்ற வெப்பத்தை குறைத்து அதேசமயம் ஸ்டைலாக காட்சி தரும் 10 திரைச்சீலைகளை இப்பதிவில் காண்போம்.

மெல்லிய வெள்ளை திரைச்சீலைகள்

தனித்தன்மையுடன் காட்சி தரும் மெல்லிய வெள்ளை திரைச்சீலைகள் கோடை காலத்திற்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் இவை ஸ்டைலாக காட்சி தருவதோடு, இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தை உள்ளே வர அனுமதித்து இதமான தோற்றத்தை உருவாக்குகின்றன .

வெளிர் பருத்தி திரைச்சீலைகள்

சூரிய ஒளியை மென்மையாக பரவச்செய்து, காற்றோட்டத்தை சீராக பராமரிக்கும் குறைவான எடை கொண்ட வெளிர் பருத்தி திரைச்சீலைகள் கோடை காலத்தில் அற்புதமாக செயல்படுகின்றன. மென்மையான சாம்பல், பழுப்பு, கிரீம் மற்றும் நடுநிலையான வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்தால் உட்புறம் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

வெளிர் நிற திரைச்சீலைகள்

வெளிர் நிறத் திரைச்சீலைகள் வெப்பத்தை உறிஞ்சுவதற்கு பதிலாக பிரதிபலிக்கும் என்பதால் வீடு அமைதியாகவும் புத்துணர்வாகவும் காட்சி தரும். அதனால் புதினா பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் லாவண்டர் வண்ண திரைச்சீலைகள் பயன்படுத்தினால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

லினன் திரைச்சீலைகள்

இயற்கையான காற்றோட்டமான இயல்பு கொண்ட லினன் திரைச்சீலைகள் கோடை காலத்திற்கேற்ற குளுமையை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை ஒளியை வடிகட்டி, காற்றோட்டத்தை அனுமதித்து மென்மையான ஒளியை பரவச்செய்து  வீட்டை அமைதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் மாற்றுகிறது.

பூக்கள் அச்சிடப்பட்ட திரைச்சீலைகள்

மென்மையான மலர் வடிவ திரைச்சீலைகள் உயிரோட்டமான சூழலை உருவாக்கி கோடை காலத்தில் மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது. வெளிர் நிறமாக இருப்பதால் காற்றோட்டம் பரவி வீட்டில் குளிர்ச்சி  ஏற்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
பழைய துணிகளை இனி குப்பையில் வீசாதீங்க.. வீட்டை அழகாக்க இந்த சூப்பர் ஐடியாக்களை ட்ரை பண்ணுங்க!
summer-curtains-for-home

மூங்கில் அல்லது பின்னல் திரைச்சீலைகள்

இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கில் மற்றும் நெசவுத் திரைச்சீலைகள் நேரடி சூரிய ஒளியை தடுத்து காற்றோட்டத்தை அனுமதித்து வீட்டை குளிர்ச்சியாகிறது. மேலும் பாரம்பரிய திரைச்சீலைகளுக்கு மாற்றாக அமைந்து வீட்டிற்கு அழகான தோற்றத்தை வழங்குகிறது .

மென்மையான வண்ணங்களில் ஒளி தடுப்பு திரைச்சீலைகள்

தந்தம் மற்றும் வெளிர் சாம்பல் நிற மென்மையான வண்ணங்கள் கொண்ட திரைச்சீலைகள் ஒளி தடுப்பானாக செயல்பட்டு பிரகாசமான தோற்றத்தை தக்க வைத்துக்கொண்டே அதிகப்படியான சூரிய ஒளி நுழைவதை தடுத்து வீட்டை குளிர்ச்சியாக்குகிறது .பெரும்பாலும் படுக்கையறைகளுக்கு பொருத்தமானவையாக இந்த வகை திரைச்சீலைகள் இருக்கின்றன. 

வரி வரியான திரைச்சீலைகள்

லேசான வண்ணங்கள் கொண்ட வரி வரியான திரைச்சீலைகள் இடத்தை ஆக்கிரமிக்காமல் கவர்ச்சியை உண்டாக்கி காற்றோட்டத்தை அனுமதித்து பார்வையை விசாலமாக்குகிறது. கூரைகளை  உயரமாக செங்குத்து கோடுகளும், ஓர் அறையை அகலமாக கிடைமட்ட கோடுகளும் காட்டும் என்பதால் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.

கட்டும் திரைச்சீலைகள்

சூரிய ஒளியையும் காற்றோட்டத்தையும் கட்டுப்படுத்தும் கட்டும் திரைச்சீலைகள் கோடை காலத்திற்கு ஏற்ற சௌகரியமான ஒன்றாகும். சிறிய ஜன்னல்கள் மற்றும் சமையலறைகளுக்கு பொருத்தமானவையாக இருக்கும் இவை அந்த இடத்தை வசீகரமாக்குவதில் சிறப்பாக செயல்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ‘சிறு’ தவறுகள்... ‘பெரிய’ விபத்துகளுக்கு வழிவகுக்குமா?
summer-curtains-for-home

அடுக்கு திரைச்சீலைகள்

கோடை காலத்தில் பகல் நேரங்களில் சூரிய ஒளி மற்றும் காற்றோட்டத்திற்கு மெல்லிய திரைகளையும், இரவு நேரங்களில் தனி உரிமை மற்றும் வெப்ப கட்டுப்பாட்டிற்கு இரண்டாவது அடுக்கையும் அடுக்குத் திரை சிலை வகைகளில் பயன்படுத்தலாம். ஆகவே இவை கோடை காலத்தில் மாறுபட்ட கலவையை வழங்கி நெகிழ்வுத் தன்மையுடன் அழகை அளிக்கிறது.

மேற்கூறியதிரைச்சீலை வகைகள் அனைத்தும் கோடை காலத்திற்கு சிறந்த பலனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com