சூட்சுமமான சக்தியை பெற்று அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் அணில் கூடு!

அணில்
அணில்
Published on

ணில் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இதன் கர்ப்ப காலம் 40 முதல் 60 நாட்கள் வரை. ஒரு முறை 4 குட்டிகள் வரை ஈனும். இதன் ஆயுட்காலம் 6 ஆண்டுகள். அணிலை ஆங்கிலத்தில், ‘ஸ்குரெல்’ என்பர். இது கிரேக்க மொழிச்சொல். 'ஸ்கிரோஸ்' என்ற கிரேக்கச் சொல் நிழல் என்ற பொருளையும், ‘அவுரா' என்பது வால் என்ற பொருளையும் குறிக்கும். இரண்டும் இணைந்து 'ஸ்குரெல்' என்று ஆகியது. கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் அணில்கள் பற்றி கூறுகையில், ‘வாலுடன் நிழலில் அமர்ந்திருக்கும் பிராணி’ என்று பொருள் படக் கூறியிருப்பார்.

அணில் மிக மிக சாந்தமான சைவ உயிரினம். இது காய்கறி, பழ வகைகளை சாப்பிடக் கூடியது. சுறுசுறுப்பான அழகான உயிரி. ரசிக்கக் கூடியது, மென்மை யானது.

ஸ்ரீராமரோடு வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது. இருந்தாலும் அணிலும் ராமருக்கு பாலம் கட்ட உதவியிருக்கிறது. இந்த உலகத்தில் ராமருக்கு எவ்வளவு விஷயங்கள் உதவி இருந்தாலும், எத்தனை உயிரினங்கள் மிருகங்களாய், மனிதர்களாய், தவசிகளாய் வாழ்ந்து அத்தனை பேரும் உதவி இருக்கிறார்கள் என்று சரித்திரங்கள் சொன்னாலும், காவியங்களில் பேசப்பட்டாலும், யாரையும் கையில் பிடித்துத் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணவில்லை. அதற்கான அடையாளமும் யாரிடமும் இல்லை. ஒரே ஒரு உயிரினமாகிய அணிலை கையில் பிடித்துத் தடவிக் கொடுத்து அதை ஆசீர்வதித்த ஸ்ரீ ராமனின் அருளைப் பெற்ற பரிபூரண மூன்று கோடுகளை கொண்ட அணில் வீட்டுக்கு வந்தால் தெய்வ கடாட்சம் பெருகி இருக்கும். அணில் வந்த வீடு வளரும்.

அணில் வீட்டில் கூடு கட்டினால் பிரச்னைகள் தீரும், பிரிந்து போன சொந்தங்கள் ஒன்றாக சேர்வார்கள். தீய எண்ணங்கள் கொண்ட மனநிலை மாற்றம் அடைந்து நல்ல நிலைக்குத் திரும்பும், நோய்கள் வராமல் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். இப்படி அணில் இருக்கும் இடங்களில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். தன தான்யங்கள் பெருகும் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள்:
வாயு பிரச்சனையை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? 
அணில்

வீட்டருகில் மரம் வளர்த்தால் கண்டிப்பாக அணில்கள் வரும். மாமரம், கொய்யா மரம் போன்ற மரங்களை விரும்பி தேடி அணில்கள் வரும். அவ்வாறு அணில்கள் வந்தால் ஸ்ரீ ராமனுடைய அருள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். அணிலுக்கு கோதுமை போன்ற தானியங்களை உணவாகக் கொடுக்கலாம். அணிலை அடித்துத் துன்புறுத்தக் கூடாது.

இது தனது பற்களை மரக்கிளையில் தீட்டி கூர்மையாக்கிக் கொள்ளும். சில நேரங்களில் மின்சார வயர்களை கூட கடித்து நாசமாக்கி விடும். பற்களை மரங்களில் தேய்க்காவிட்டால் ஆண்டிற்கு அரை அடி நீளம் வளர்ந்து விடும். பற்களால் தோட்டத்தில் குழி தோண்டி நாசமும் செய்யும். காய் கறிகளை, பழங்களை, மரத்திலே கடித்து சேதப்படுத்தும். அதேநேரத்தில் தீமை செய்யும் பூச்சிகளையும் விழுங்கி விவசாயிகளுக்கு நன்மையும் செய்யும்.

இவ்வாறு ஸ்ரீராமனின் அருளைப் பெற்ற அணில் நம் வீட்டில் கூடு கட்டினால் கலைக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com