வாயு பிரச்சனையை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? 

Foods increase gas problems.
Foods increase gas problems.
Published on

வாயு பிரச்சனை என்பது வயிற்றுப் பகுதியில் வீக்கம், வலி மற்றும் அடிக்கடி காற்று வெளியேற்றம் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் உண்ணும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில உணவுகள் வாயு உற்பத்தியை அதிகரித்து பிரச்சனையை மோசமாக்கும். இந்தப் பதிவில் வாயு பிரச்சனையை அதிகரிக்கும் உணவுகள் பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம். 

உணவு மற்றும் வாயு பிரச்சனைக்கு உள்ள தொடர்பு: 

மனித உடலில் செரிமானம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். நாம் உண்ணும் உணவுகள் செரிமான மண்டலத்தில் நுழைந்து பல்வேறு என்சைம்கள் மற்றும் பாக்டீரியாக்களால் சிதைக்கப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போது சில உணவுகள் வாயுவை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதன் விளைவாக அதிகப்படியான வாயு உற்பத்தியாகி வயிற்றுப் பகுதியில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது.‌

வாயு பிரச்சனையை அதிகரிக்கும் உணவுகள்: 

  • பருப்பு வகைகள் செரிமானமாக கடினமாக இருக்கும். இவை குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு வாயுவை உற்பத்தி செய்கின்றன. 

  • பூண்டு, வெங்காயம், காலிபிளவர், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் சல்பர் சேர்மங்கள் இருப்பதால் வாயு உற்பத்தி அதிகரிக்கும். 

  • ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களில் பிராக்டோஸ் அதிகமாக உள்ளது. இது சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி வாயு உற்பத்திக்கு வழிவகுக்கும். 

  • லாக்டோஸ் எனப்படும் பால் சர்க்கரைக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, பால் மற்றும் பால் பொருட்களால் வாயு பிரச்சனை ஏற்படும். 

  • அதிகமாக சோடா மற்றும் பிற கார்பனேற்றப்பட்ட பானங்கள் வயிற்றில் அதிகப்படியான வாயுவை சேர்க்கின்றன. மேலும், சில சேர்க்கை இனிப்புகள் குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு வாய்வாக மாறுகிறது. 

  • அதிக கொழுப்புள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்குவதால் வாயு பிரச்சனைகளை உண்டாக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வாயு கோளாறு பிரச்னைகளுக்கு நிவாரணமாகும் ஓமம்!
Foods increase gas problems.

வாயு பிரச்சனையை கையாள்வதற்கு வாயு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகளைக் குறைத்து நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் அதிக அளவில் உண்பதைத் தவிர்த்து சிறிய அளவில் அடிக்கடி உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உணவை நன்கு மென்று உண்ணுவதால், செரிமானம் எளிதாகி வாயு உருவாகாமல் இருக்கும். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். வாரத்தில் நான்கு நாட்களாவது உடற்பயிற்சி செய்வது உங்களது செரிமானத்தை மேம்படுத்தி வாயு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளும். 

வாயு பிரச்சனை உள்ளவர்கள் மேற்கூறிய உணவுகளைத் தவிர்த்து சரியான உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றி, வாயு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். இந்தப் பிரச்சனை உங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com