மாணவர்கள் நினைவுத்திறனை அதிகரிக்கும் வழிகள்!

Lifestyle articles
Students' memory
Published on

-சந்தியா ஷங்கர் 

தையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ- உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.

புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.

முழு கவனம் மிக அவசியம்.

mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள் Example news - north east, west, south.

படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

பாடங்களில் புரியாத வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் வந்தால், அதை உங்களுக்குப் புரிந்த வார்த்தைகளுடன் தொடர்புபடுத்தி படித்தால் நினைவில் பதியும்.

படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்.

நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.

இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும்படி சொல்லவேண்டும்.

இதையும் படியுங்கள்:
வயதானவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள்!
Lifestyle articles

தூங்கபோகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும்போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்

மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com