ஆவியாகாமல் தடுக்க
கற்பூரம் வைத்திருக்கும் டப்பாவை மூடாமல் விட்டாலோ, நாளடைவில் வைத்திருந்தாலோ ஆவியாகிவிடும். இதனை தடுக்க கற்பூரத்துடன் மிளகு சேர்த்து போட்டு வைத்தால் ஆவியாவது தடுக்கப்படும்.
விரைவில் எரிய
விளக்குத் திரி வைத்திருக்கும் டப்பாவில் கற்பூரத்தை தூவி விட்டால் திரி வாசனையாக இருப்பதோடு, விளக்கேற்றும்போது விரைவில் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கும்.
வண்டுகள் வராமல் தடுக்க
மஞ்சள், குங்குமம் பாக்கெட்டுகளை சிறிது கொட்டி டப்பாவில் போட்டுவிட்டு, மீதி வைத்திருக்கும் பாக்கெட்டில் கற்பூரத்தை சேர்த்து வைப்பதால் வண்டுகள், பூஞ்சை தொற்று இல்லாமல் இருக்கும். மஞ்சள், குங்குமம் வைத்திருக்கும் டப்பாவிலும் கற்பூரத்தை போட்டு வைத்தால் வாசனையாக இருக்கும்.
கற்பூரம் அனைவருக்கும் எளிதாக கிடைக்கும். அதை இன்னும் எளிதாக வீட்டில் இருந்தே வாங்க...
எறும்புகளை விரட்ட
ஒரு பவுலில் இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்து அதனுடன் கற்பூரத்தை தூளாக்கி விட்டு, டிஷ்யூ பேப்பர் அல்லது துணியை நன்கு டிப்செய்து பிழிந்து கொண்டு சர்க்கரை, வெல்லம் வைத்திருக்கும் டப்பாவை இறுக மூடி அதன் மேல் துடைத்து எடுக்க கற்பூர வாசனைக்கு எறும்பு பூச்சிகள் அண்டாது.
கரப்பான் பூச்சி, பல்லி விரட்ட
ஒரு பவுலில் இரண்டு டம்ளர் தண்ணீர், தூளாக்கிய கற்பூரம், மஞ்சள் தூள், கல் உப்பு, ஷாம்பு கலந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி, பல்லி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்ய பூச்சிகள் தலை தெறிக்க ஓடிவிடும். இந்தக் கலவையை கலந்து வீடு துடைத்தால் நறுமணமாக இருப்பதோடு பூச்சிகள் தொல்லை இருக்காது.
பூச்சிகளை விரட்ட
புத்தக அலமாரியிலும், மளிகை பொருட்கள் வைத்திருக்கும் அலமாரி, துணி வைத்திருக்கும் ஃஷெல்புகளில் சிறிய கட்டி கற்பூரத்தை பாலித்தீன் கவர் பிரிக்காமல் சிறிதாக ஓட்டை போட்டு வைக்க கற்பூரம் ஆவியாகி பூச்சிகளை விரட்டுவதோடு நறுமணமாகவும் இருக்கும்.
ஈரப்பதத்தை உறிஞ்ச
சிறிய அளவு மூடியை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை தூளாக்கி அதனுடன் அரிசி சேர்த்து ஒரு கவர் அல்லது பேப்பர் வைத்து நன்கு இறுக கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு குண்டூசியால் கவரில் ஆங்காங்கே துளையிட்டு இதனை துணி வைத்திருக்கும் அலமாரியில் வைக்க மழைக்காலத்தில் ஏற்படும் ஈரப் பதத்தை உறிஞ்சுவதோடு நறுமணம் வீசும்.
கொசுக்களை விரட்ட
ஒரு அகல் விளக்கில் ஒரு ஸ்பூன் கடுகை தூளாக்கி, அதனுடன் கற்பூரத்தையும் சேர்த்து தூளாக்கி 2 லவங்கத்தை சேர்த்து எண்ணெய் ஊற்றி மாலை நேரங்களில் விளக்கேற்ற கொசுவை விரட்டலாம்.
கை, கால், வலி, சளியைப் போக்க
ஒரு கரண்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்துக்கொண்டு சூடு படுத்திய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ,கற்பூரத்தை சேர்க்க வேண்டும். இந்த எண்ணையை கை, கால் வலி இருக்கும் இடங்களில் மிதமான சூட்டில் தேய்க்க நிவாரணம் கிடைக்கும். மழைக்காலங்களில் ஏற்படும் சளியைப் போக்க மார்பில் தடவினால் சளி குறைய ஆரம்பிக்கும்.
எதிர்மறை சக்தியை விரட்ட
ஒரு அகல்விளக்கில் 3 லவங்கம், 3 ஏலக்காய், 3 கற்பூரம் எடுத்துக் கொண்டு இதை ஏற்றி செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் வீட்டின் அனைத்து இடங்களிலும் காட்ட எதிர்மறை சக்தி அகன்று, பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்து வீடே புத்துணர்ச்சியாக இருக்கும்.
கற்பூரம் அனைவருக்கும் எளிதாக கிடைக்கும். அதை இன்னும் எளிதாக வீட்டில் இருந்தே வாங்க...