மெசேஜில் பேசுவதா? நேரில் பேசுவதா? எது நல்லது?

Talk in a message? Talking in person? What is good?
Talk in a message? Talking in person? What is good?pixabay.com
Published on

முன்பெல்லாம் நாம் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்றால், எவ்வளவு தூரம் என்றாலும் மிதிவண்டியிலோ அல்லது ஆட்கள் வைத்தோ செய்திகள் சொல்லி அனுப்புவது வழக்கமாக இருந்தது. ஒருவேளை வேறு ஊருக்கு செல்ல வேண்டிய அவசர செய்தி என்றால் தந்தி மூலம் செய்திகள் அனுப்புவோம். மற்றப்படி கலந்துரையாடிக்கொள்வதற்கெல்லாம் அனைவரும் ஒரு மரத்தடியிலோ அல்லது ஒருவர் வீட்டிலோ நேருக்கு நேர் அமர்ந்துதான் பேசிக்கொள்வார்கள். பேசும் தலைப்புகளைப் பற்றித்தான் அவர்களுக்குள் பிரச்னை வருமே தவிர ஒருபோதும் ஒருவர் பேசுவதை மற்றொவர் வேறுவிதமாகப் புரிந்துக்கொண்டு கருத்து வேறுப்பாட்டால் பிரச்னை வருவது குறைவே.

ஆனால், இப்பொழுது ஒரு செய்தியாக இருந்தாலும் சரி; உரையாடலாக இருந்தாலும் சரி; அனைத்தையும் வாட்ஸப் மூலமே விடிய விடிய பேசுகிறோம். ஒரு மணி நேரம் உரையாடுவதை வாட்ஸப் மூலம் இரவு முழுவதும் பேசி கழிக்கிறோம். இது ஒரு பக்கம்.

மறுபக்கம் வாட்ஸப்பில் பேசும்போது நாம் எப்படி பேசுகிறோம், எந்த விதத்தில் அந்த செய்தியை சொல்கிறோம் என்பது எதிரே உள்ளவருக்குத் தெரியாது. நம்முடைய உடல் பாவமும் முக பாவமும் பேசும் தொனியும் சேர்ந்தால்தான் நாம் என்ன சொல்ல வருகிறோம், நம் நோக்கம் என்ன என்பதை எதிரே உள்ளவர்களுக்கு தெளிவாக சொல்ல முடியும்.

ரு அவசரமான நிலையில், உடனே நாம் அந்த தகவலை அவருக்கு சொல்ல வேண்டும் என்ற பட்சத்தில் நாம் மெசேஜ் மூலம் சொல்லலாம். ஆனால், நலம் விசாரிப்பதற்கு, நீண்ட காலத்திற்குபின் நண்பனிடம் பேசத் தோன்றும்பொழுது, நம்முடைய மேனேஜருடன் வேலை சம்பதமாக பேசும்பொழுது, ஒருவரிடம் உதவிக் கேட்கும் (அவசர உதவி இல்லாதது) பொழுது, சண்டைப் போட்டப்பின் ஒருவரிடம் அதனைப் புரிய வைக்கும் பொழுது, ஏன்? தன் காதலை சொல்லும்பொழுதும் நாம் போனைத் தூக்கிப்போட்டு கண்களைப் பார்த்து நேரில் பேசுவதுதான் சரி.

ஒரு குறுஞ்செய்தி என்றால் அது அவர் அறியக்கூடிய செய்தி. ஆனால் மற்றவையெல்லாம் நாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய ஒரு விஷயம்.

உதாரணத்திற்கு, மேனேஜர் நீங்கள் வேலையில் ஒரு தவறு செய்ததாக கூறுகிறார் என்றால், அப்போது நீங்கள் மெசேஜில் உங்கள் மேல் தவறு இல்லை என்று விளக்கம் கூறினீர்கள் என்றால், அவருக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் கோபமாகப் பேசுவதுபோல் தோன்றும். நீங்கள் பொறுமையாக எடுத்துக் கூறினாலுமே அவருக்கு நீங்கள் கோபமாகப் பேசுவது போல்தான் தோன்றும். இதுவே, நீங்கள் நேரில் பேசினால் வேலையில் என்ன தவறு? யார் செய்தார்? உண்மையில் எப்படி நிகழ்ந்தது எனப் பொறுமையாகப் பேசி தீர்வு காண முடியும்.  உங்கள் எதிரே உள்ளவர்கள் நீங்கள் உண்மையில் தவறு செய்தீர்களா? இல்லை பொய் சொல்கிறீர்களா? என்பதை உங்கள் உடல் மற்றும் முகப்பாவங்களை வைத்தே கண்டிபிடித்துவிடுவர். இது நீங்கள் தவறு செய்யவில்லை என்று காண்பிக்க உதவி செய்யும்.

பெரும்பாலான சண்டை, கருத்து வேறுபாடுகள் இதுபோன்று மெசேஜிஸ் காரணமாகத்தான் வரும். உங்கள் காதலியிடம் சண்டை வரவும் இதுதான் காரணம். சண்டை முடிந்த பின்னர் அந்த சண்டை வைத்தே மீண்டும் சண்டை வரவும் இதுதான் காரணம்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்தி ரெசிபி!
Talk in a message? Talking in person? What is good?

ஒருவரிடம் நேரில் பேசும்போது, ஒரு விஷயத்தை மனதின் வழியாக பேசுகிறார்களா அல்லது நடிக்கிறார்களா? என்பதை எளிதாக தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், மெசேஜில் அப்படி இல்லை. எதிரே உள்ளவர்கள் எந்த நோக்கத்துடன் பேசுகிறார்கள் என்பதே தெரியாது. ஆகையால் ஒருவர் உங்களிடம் நட்பு ஏற்படுத்த முயன்றாலோ அல்லது காதலை சொல்ல முயன்றலோ நேரில் பழகிப் பேசினால் மட்டுமே ஒரு முடிவை எடுங்கள். அதேபோல் நீங்களும் நேரிலையே அணுகுவது மட்டும்தான் நல்லதாக முடியும். ஏனெனில், அதுவே நம்பிக்கைத்தன்மை உள்ளதாக இருக்கும்.

ஆகையால் ஒரு வரி செய்திகளுக்கு மெசேஜைப் பயன்படுத்துங்கள். உரையாடல்களுக்கும், விளக்கங் களுக்கும் நேரத்தை விணடிக்காமல் நேரில் சென்று பேசுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com