
குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது மிகவும் பிடித்தமான ஒன்று தான். ஆனால், தற்போது உள்ள காலக்கட்டத்தில் குழந்தைகள் எந்நேரமும் போனும், கேமுமாகவே இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை சொல்லித் தருவதன் மூலமாக அவர்கள் அறிவு மேம்படும். அத்தகைய 6 அறிவுப்பூர்வமான விளையாட்டுகளைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. புதிர் விளையாட்டு.
குழந்தைகளின் கவனத்தை மேம்படுத்தவும், Problem solving skills ஐ அதிகரிக்கவும் இந்த விளையாட்டு மிகவும் உதவியாக இருக்கும். இது ஒரே சமயத்தில் வலது மற்றும் இடது மூளைகளுக்கு பயிற்சியளிக்கிறது. இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலமாக குழந்தைகளின் படைப்பாற்றல், உள்ளுணர்வு போன்றவை அதிகரிக்கிறது.
2. பரமபதம்.
பரமபதம் மாதிரியான யூக விளையாட்டு சிக்கலான நேரத்தில் சிறந்த முடிவுகள் எடுக்க கற்றுக்கொடுக்கும். இது மூலமாக குழந்தைகள் ஒரு விஷயத்தில் இருக்கும் ரிஸ்க் பற்றியும் அதன் மூலமாக கிடைக்கும் பாடம் பற்றியும் தெரிந்துக் கொள்வார்கள்.
3. சுடோக்கு.
சுடோக்கு போன்ற எண்கள் உள்ள விளையாட்டு குழந்தைகளை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைப்பது மட்டுமில்லாமல் Mathematics skills ஐயும் குழந்தைகளிடம் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
4. குறுக்கெழுத்து விளையாட்டு.
இந்த விளையாட்டு புதுபுது வார்த்தைகளை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் மொழியை குழந்தைகளிடம் கற்றுக்கொடுக்கவும் உதவுகிறது. இதனால் குழந்தைகளின் யோசிக்கும் திறன் அதிகரிக்கிறது.
5. சதுரங்கம்.
சதுரங்க விளையாட்டை அனைவருக்குமே தெரிந்த விளையாட்டு தான். இது அறிவு சார்ந்த விளையாட்டு முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும். மேலும் நேரத்திற்குள் விரைந்து செயலாற்றக்கூடிய திறனை உருவாக்கும் விளையாட்டு சதுரங்கம் ஆகும்.
6. ரூபிக் க்யூப்
குழந்தைகளுக்கு ரூப்பிக் க்யூப்பை விளையாட தருவதன் மூலமாக அவர்களின் அறிவாற்றல் திறன்கள் மேம்படுகிறது, நிறைவாற்றல் அதிகரித்து பிரச்னைகளை தீர்க்கக்கூடிய தன்மையும் அதிகரிக்கிறது. மேலும் பொறுமையாக செயல்படவும், விடாமுயற்சியும் ஒரு செயலை தொடர்ந்து செய்து வெற்றிப் பெறவும் கற்றுத் தருகிறது.
எனவே, குழந்தைகள் மொபைலில் கேம் விளையாடுவதை ஊக்குவிப்பதை விடுத்து இதுப்போன்ற அறிவு சார்ந்த, அறிவை வளர்க்கக்கூடிய விளையாட்டை சொல்லிக் கொடுப்பதின் மூலமாக குழந்தைகள் புத்திசாலிகளாக வளர்வார்கள் என்பதில் ஐயமில்லை.