கொளுத்தும் வெப்பம் மக்களே உஷார்!

AC
ACImage Credit: Indiamart

வெயில் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் ஏ.சி ஒரு அத்தியாவசியப் பொருளாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏ.சியை சரியான முறையில் பொருத்தி, கவனத்துடன் பராமரிக்காததால் ஏற்படும் விளைவுகளும் ஏராளம். அப்போ என்ன செய்யணும்? இதோ சில டிப்ஸ்...

ஏசியைப் பொறுத்த சரியான இடம் எது?

 • முதலில் நீங்கள் ஏ.சி வாங்கும் போது வீட்டில் அதனைப் பொருத்தப்போகும் இடத்தின் சதுரடியை கணக்கில் கொள்ளவேண்டும்.

 • உங்களுடைய வீட்டின் அறையானது மொத்தமாக 100 சதுரடி அளவில் இருந்தால் 1 டன் அளவுள்ள ஏ.சி மட்டுமே போதுமானது. இல்லையேல் கொஞ்சம் அதிகமாக இருந்தால் ஒன்றரை டன் அளவில் பயன்படுத்தலாம்.

 • அளவு 200 சதுரடி இருந்தால் 2 டன் கொண்ட ஏ.சியைப் பொருத்தலாம்.

 • அடுத்ததாக ஏ.சி பொருத்தும் அறையில் சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. ஏனென்றால் சூரிய ஒளி அறைக்குள் இருந்தால் ஏ.சி குளிர்ச்சி அடைய சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். அதோடு அதிகளவு மின்சாரத்தையும் இழுக்கும். இதற்கு தீர்வாக உங்களுடைய அறையில் ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் பயன்படுத்து நல்லது.

 • ஏ.சி இருக்கக்கூடிய அறையில் அதிக பொருள்களை வைக்க கூடாது. அதிலும் குறிப்பாக தேவையற்ற பொருட்கள் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஏசியைப் பராமரிக்கும் முறை:

 • ஏ.சி வாங்கும் போது இலவச ஸ்டெபிலைசர் வழங்குவார்கள். அவை தரம் குறைந்த ஸ்டெபிலைசராக கூட இருக்கலாம். அதை தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில் நல்ல தரமான ஸ்டெபிலைசரின் தேர்வானது அவசியமாகும்.

 • அதே போன்று ஏ.சியில் உயர் மின்னழுத்தத்தை தாங்க கூடிய அளவுக்கு தரமான கேபிள், சுவிட்ச் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

 • ஒரு மாதத்திற்கு இருமுறையாவது ஏ.சி ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் இதில் இருக்கும் தூசிகள் ஏ. சி யை நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் போது வெப்பத்தைக் கிளப்பி தீப்பற்றி வெடிக்க செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
AC ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? 
AC
 • ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி சர்வீஸ் செய்ய வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில் புகை அதிகம் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்விஸ் செய்வது நல்லது.

 • அடுத்ததாக, ஏ.சியின் உட்புறம் செயல்படும் ஃபேன் மோட்டார்கள், உள்ளிருக்கும் பெல்ட், கேஸின் அளவு என அனைத்தையும் சரிபார்ப்பதும் அவசியம்.

 • ஏ.சியின் கேஸ் அளவு குறைந்தாலும்கூட குளிர்ச்சி கிடைக்காது. இதையும் கவனத்திற்கொண்டு சரிபார்த்து நிரப்ப வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com