வீட்டில் அகர்பத்தி ஏற்றுவதால் இவ்வளவு நன்மைகளா? 

Benefits of Using Agarbatti at Home
Benefits of Using Agarbatti at Home

வீட்டில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் அகர்பத்தியை தூபக் குச்சி என்றும் அழைப்பார்கள். இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் மத மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக இருக்கிறது. இதன் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு அப்பால், அகர்பத்தி ஒரு வீட்டின் சுற்றுப்புறத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தி பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பதிவில் அகர்பத்தியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

அகர்பத்தியை வீட்டில் ஏற்றும்போது அமைதியான மற்றும் நிதானமான சூழலை உருவாக்குவதால், இவை பெரும்பாலும் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. அகர்பத்தியை எரிப்பதிலிருந்து வெளியாகும் நறுமணப் புகை, மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றைக் குறைத்து அமைதியான உணர்வை ஏற்படுத்த உதவும். எனவே உங்களுக்கு மிகவும் பிடித்த வாசனை உள்ள அகர்பத்தியை வீட்டில் பயன்படுத்துங்கள். குறிப்பாக மல்லிகை, சந்தனம், லாவண்டர் போன்ற வாசனைகள் உங்களது மகிழ்ச்சியைத் தூண்டி நல்ல உணர்வை ஏற்படுத்தக் கூடியவை. 

இந்தியாவில் அகர்பத்திகளின் பின்னால் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகள் அதிகம் உள்ளன.  பிரார்த்தனைகள், சடங்குகள் அல்லது புனித நிகழ்வுகளின்போது தூபத்தை எரிப்பது சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. அகர்பத்தியின் நறுமணம் பிரார்த்தனைகளின்போது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. 

வீட்டை நறுமணத்துடன் வைத்திருக்க செயற்கை ஏர் பிரஷ்ணர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, அகர்பத்தி  இயற்கையான நறுமணத்தை வீட்டினுள் பரவச் செய்கிறது. இதிலிருந்து வெளியாகும் நறுமணப் புகை வீட்டில் உள்ள விரும்பத்தகாத வாசனைகளை நீக்கி இனிமையான நறுமணத்தை ஏற்படுத்தும். எனவே சமையலறை, குளியலறை அல்லது அதிக வாசனை வெளியேறும் இடத்தில் அகர்பத்தி ஏற்றுவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
காதுக்குள் பூச்சி போய்விட்டால் இத மட்டும் செஞ்சிடாதீங்க! 
Benefits of Using Agarbatti at Home

சில குறிப்பிட்ட வகையான அகர்பத்திகள் பூச்சி விரட்டும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் தடுக்கப்படுகிறது. இது கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலக்கப்பட்ட பூச்சி விரட்டிகளுக்கு மாற்றாக ரசாயனமற்ற பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. 

பல வரலாற்றுக் குறிப்புகளில் அகர்பத்திகள் எதிர்மறையை அகற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகி, தெய்வம் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. வீட்டில் அகர்பத்தியை ஏற்றுவதால், தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாக அது மாறும் என்கின்றனர். மேலும் கலாச்சார ரீதியாக அகர்பத்தி வீடுகளில் பயன்படுத்தப்படுவதால், இன்றளவும் நாம் அதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். 

இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் வீட்டில் அதர்பத்தியை ஏற்றுவதால் கிடைக்கின்றன. எனவே தினசரி வீட்டில் அதர்பத்தி ஏற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com