பீங்கான் பாத்திரங்களின் அழகியலும், அதிசய நன்மைகளும்!

Advantages of ceramic utensils
ceramic utensils
Published on

பீங்கான் பாத்திரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பலவித நன்மைகளையும் வழங்குகின்றன. அவை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நீடித்து நிற்கும் தன்மை: பீங்கான் பாத்திரங்கள் மிகவும் நீடித்து நிலைக்கும் தன்மை வாய்ந்தவை. அவை நீண்ட நாட்களுக்கு உழைக்கும். பீங்கான் விரிசல்களை எதிர்க்கும். நல்ல தரமான பீங்கான் பொருட்கள் அவ்வளவு எளிதில் உடையாது. காலங்கள் சென்றாலும் அவை அப்படியே இருக்கும்.

2. நுண்துளை இல்லாதவை: பீங்கான் நுண்துளை இல்லாதவை. அதாவது, அதில் வைக்கப்படும் உணவுப் பொருள்களின் மணம், அது ஏற்படுத்தும் கறைகள் அல்லது சுவைகளை உறிஞ்சாது. இவற்றை சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. மேலும், பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தையும் குறைக்கிறது. சரும உணர்திறன் வாய்ந்தவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கண் துடிச்சா நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா? உண்மை என்ன?
Advantages of ceramic utensils

3. வெப்ப எதிர்ப்பு: பீங்கான் பாத்திரங்கள் அதிக வெப்பநிலையை தாங்கும். சூடான உணவுப் பொருட்களை அதில் வைத்தாலும் அவற்றைத் தாங்கி நிற்கும் வல்லமை படைத்தவை. பாத்திரங்கள் சேதம் அடையாமல், உடைந்து போகாமல் இருக்கும்.

4. அழகியல் தன்மை: பீங்கான் பாத்திரங்கள் அவற்றின் அழகு, நேர்த்தி மற்றும் சிக்கலான வடிவமைப்புகளுக்கு புகழ் பெற்றவை. உணவு மேஜையில் அலங்காரமாக வைக்கவும் ஏற்றவை. மேசை மீது வைத்தால் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கும்.

5. எளிதான பராமரிப்பு: பீங்கான் பாத்திரங்களை சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. அவற்றை தண்ணீர் மற்றும் சோப்பு உபயோகப்படுத்தி கையாலும் கழுவலாம். அல்லது டிஷ்வாஷரிலும் வைத்து கழுவலாம்.

இதையும் படியுங்கள்:
தினசரி வீட்டு உபயோகப் பொருட்கள் நீண்ட நாள் உழைக்க சில பயனுள்ள டிப்ஸ்!
Advantages of ceramic utensils

6. உணவுப் பாதுகாப்பு: பீங்கான் பாத்திரங்களில் சேமிக்கப்படும் உணவு பாதுகாப்பாக இருக்கும். உணவு அல்லது பானங்களில் இருந்து ரசாயனங்கள் அல்லது நச்சுக்களை வெளியேற்றாது. பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு அனுபவத்தை உறுதி செய்கிறது.

7. சுற்றுச்சூழலுக்கு உகந்தது: பீங்கான் பாத்திரங்கள் இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றை மறுசுழற்சி செய்யலாம் அல்லது மறு பயன்பாடு செய்யலாம். எனவே, இவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளன. பீங்கான் பாத்திரங்களை தரமானவைகளாகப் பார்த்து வாங்கினால் அவை பல ஆண்டுகளுக்கு உழைக்கும். பல தலைமுறைகள் தாண்டி நிற்கும். இவை குடும்ப கலாசாரம் சென்டிமென்ட், பாரம்பரியம் போன்றவற்றின் அடையாளமாகத் திகழும்.

இதையும் படியுங்கள்:
முதியோர்களின் இறுதிக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க உதவும் ‘டெத் கிளீனிங்’ ஃபார்முலா!
Advantages of ceramic utensils

பீங்கான் பாத்திரங்களைக் கையாளும் முறை:

1. பீங்கான் பாத்திரங்களை மென்மையாகக் கையாள வேண்டும். உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் உடைந்து விடும். மேலும் இவற்றை கடுமையான ரசாயனங்கள் அல்லது பிரஷ் கொண்டு தேய்க்கக் கூடாது. அவற்றில் கீறல் விழ வாய்ப்புகள் உண்டாகும்.

2. பீங்கான் கப்புகளில் காப்பியோ டீயோ குடித்து முடித்த பின் உடனே அவற்றைக் கழுவி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் கறை படிய வாய்ப்புகள் உள்ளன. அதேபோல, பீங்கான் தட்டுகளில் உணவு உண்டு முடித்த பின், உடனே சுத்தம் செய்து வைத்து விட்டால் நீடித்து உழைக்கும்.

3. நேரடியான சூரிய ஒளியில் அவற்றை காய வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அதனுடைய வண்ணம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

4. பீங்கான் பாத்திரங்கள் கனமாக இருக்கும். எனவே, அவற்றை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றை மைக்ரோவேவ் அடுப்பில் உபயோகப்படுத்தக் கூடாது. அதிக வெப்பத்தில் அவை சிதைந்து போகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com