சுவாசிக்கும் காற்றையும், மனதையும் சுத்தப்படுத்தும் தி பெஸ்ட் Air Purifier எது தெரியுமா?

Air-Purifying Plants
Air-Purifying Plants
Published on

பெரும்பாலும், பெரு நகரங்களில் வீடுகளுக்குள்ளேயும் வெளியிலும் காற்று மாசுபாடானது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியில் காற்று மாசுபாட்டை குறைத்து சுத்திகரிப்பது என்பது பத்து பென்சில்களை ஒரே சமயத்தில் உடைக்க முயலுவதற்கு சமம். ஆனால், நம் வீடுகளில் இருக்கும் காற்றை சுத்திகரிப்பது சிறிது எளிதான காரியமே.

நீங்க கெஸ் பண்ணது சரிதான். Air Purifier பற்றிதான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். ஆனால், நீங்கள் நினைப்பது போல கடையில் வாங்கும் Air Purifier இல்லை. இயற்கையான முறையில், குறைந்த செலவில், வீடுகளிலும், அலுவலகங்களிலும் காற்றை சுத்திகரிப்பதோடு, உங்கள் அழகான அறைக்கு மேலும் அழகு சேர்க்கும் Air Purifier பற்றிதான் காணப் போகிறோம்.

பொதுவாக, வீடுகள், அலுவலகங்கள் போன்ற ஒரு மூடப்பட்ட இடங்களில் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் தூய்மை ஆகியவற்றைக் சரிநிலையில் கட்டுப்படுத்த, தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் HVAC (Heating, Ventilation, and Air conditioning) என்ற அமைப்பைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இவற்றுக்கு மாற்றாக, சில தாவரங்களை வளர்ப்பதன் மூலமும் உட்புற காற்றை சுத்தப்படுத்த முடியும்.

1989ல் NASA நடத்திய ஆய்வின் மூலம் உட்புற காற்று மாசுபாட்டைக் குறைக்கும் திறன் தாவரங்களுக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், தாவரங்கள் காற்றை தொடர்ந்து சுத்தப்படுத்தினாலும், குறிப்பிடத்தக்க மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த முடியாத அளவுக்கு அவற்றின் திறன் மெதுவாகவே இருக்கும். மேலும், ஒரு கட்டிடத்தின் காற்றோட்ட அமைப்புடன் போட்டியிட ஒரு சதுர அடிக்கு 93 செடிகள் தேவைப்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்!

இதையும் படியுங்கள்:
தயக்கத் தடைக்கற்களை தகர்த்தெறிய பெண்களுக்கு சில ஆலோசனைகள்!
Air-Purifying Plants

அப்படியிருக்க, காற்றை சுத்தப்படுத்தும் செடிகளை சிறிய அறையில் எவ்வாறு வளர்ப்பது என யோசிப்பது இயல்புதான்.

கவலைவேண்டாம்! வேறு சில ஆய்வுகள், நாசாவின் இந்த கண்டுபிடிப்பை நிரூபித்து அதற்கு ஆதரவும் அளித்துள்ளன. சில குறிப்பிட்ட தாவரங்கள் நிச்சயமாக காற்றோட்ட அமைப்புகள் அதாவது, Air Purifier-க்கு மாற்றாக காற்றை சுத்தப்படுத்துவதோடு, மேலும் பல நன்மைகளையும் தருகிறது எனத் தெரிவித்துள்ளனர். இவை வீட்டில் ஈரப்பதத்தின் அளவை பராமரிக்கவும், வீட்டின் வெப்பநிலையை பராமரிக்கவும், கார்பன் டை ஆக்சைடை குறைக்கவும், காற்றில் இருந்து சில மாசுகள் மற்றும் தூசிகளை அகற்றவும் உதவி செய்கின்றன. மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் இவை உதவுகின்றன.

இந்த தாவரங்களின் இலைகள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஒளியை உறிஞ்சி, ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றலாக மாற்றுகின்றன. அதோடு சேர்த்து இவை காற்றில் உள்ள நச்சுகளையும் உறிஞ்சிவிடும். ஆக்ஸிஜனையும் உற்பத்தி செய்கின்றன. இந்த தாவரங்கள் அளவிற்கு எந்த ஒரு தொல்நூட்ப Air Purifier-ரும் செய்ய முடியாது.

உட்புற காற்றை சுத்தப்படுத்தும் Air Purifier செடிகளின் பட்டியல் இதோ:

  • English Ivy

  • Bamboo Palm

  • Gerbera Daisy

  • Dragon Tree

  • Peace Lily

  • Spider Plant

  • Aloe Vera

  • Heart Leaf Philodendron

முக்கியமாக கெர்பெரா டெய்சி, 24 மணி நேரத்தில், காற்றை வியத்தகு முறையில் சுத்தம் செய்கிறது என நாசாவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com