அர்த்தங்கள் ஆயிரம் பொதிந்த அந்தக் கால பழக்கங்கள்!

திருமணத்தில் மெட்டி அணிவித்தல்
திருமணத்தில் மெட்டி அணிவித்தல்https://www.seithipunal.com

மது முன்னோர்கள் அக்காலத்தில் ஏற்படுத்திவிட்டுச் சென்ற பழக்கங்கள் தற்காலத்துத் தலைமுறைகள் மத்தியில் மூடநம்பிக்கைகளாகத் தோன்றினாலும், அப்பழக்கங்களின் பின்னணியில் ஒரு அர்த்தமும் அறிவியல்பூர்வ விஞ்ஞானமும் ஒளிந்திருப்பதை உணர முடிகிறது. அதுபோன்று முன்னோர்கள் வகுத்துத் தந்த பழக்க வழக்கங்கள் சிலவறைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. அரச மரத்தை சுற்றி வருவது: பொதுவாக, அரச மரத்தை பயனற்ற மரமாகக் கருதுவதுண்டு.ஏனெனில், அதில் பழம் பூக்களும் இருப்பதில்லை என்பதால். ஆனால், இரவு நேரத்தில் அதிலிருந்து வெளியாகும் ஆக்சிஜன் நமது உடலுக்கு பலவித நன்மைகள் செய்வதால் இந்த மரத்தை ஆலயங்களில் ஆன்மிக ரீதியாக பாதுகாப்புடன் வைத்து முன்னோர்கள் அரச மரத்தை சுற்றுங்கள் என்று சொல்லிச் சென்றுள்ளனர்.

2. சூரியனை வழிபடுதல்: விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் சூரிய நமஸ்காரம் அந்த காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படுகிறது. இதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளியின் கதிர்கள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது என்பதுடன் அதிகாலையில் எழுந்து பணிகளை பார்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியமும் மனதுக்கு உற்சாகமும் பெற முடியும் என்பதே.

3. மருதாணி வைப்பது: மருதாணி சக்தி வாய்ந்த மூலிகையாகக் கருதப்படுகிறது. அழகு என்பது ஒருபுறம் இருந்தாலும் இதில் ஒரு மகத்தான உண்மையும் அடங்கியுள்ளது. ஆம், திருமணங்களின்போது பெண்ணுக்கு உண்டாகும் மன அழுத்தம் குறைக்க இது உதவுகிறது. ஆம், மணப்பெண்ணுக்கு கைகளில் மருதாணி தடவிக்கொள்ளும்போது நரம்புகளை குளிரச் செய்து மன அழுத்தத்தை மட்டுப்படுத்துகிறது. மணப்பெண்ணுக்கு மருதாணி இடும் சடங்கு நிகழும் காரணம் இதுதான்.

4. தரையில் அமர்ந்து உண்ணுவது: தரையில் அமர்ந்து உணவை உண்ணும்போது இரு கால்களையும் மடக்கி சுகாசன நிலையில் அமருகிறோம். இந்த நிலை நமது உணவு சுலபமாக செரிமானமடைய வழி செய்கிறது. இதனால் மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.

5. துளசி மாடங்கள்: துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள் மற்றும் மகத்துவத்தை புரிந்துகொண்ட பழங்கால முனிவர்கள் அது அழிந்து விடாமல் காப்பதற்காகவே அதனை வழிபடும் சடங்காக உண்டாக்கினார்கள். அதில் இருந்து வெளிப்படும் ஆக்ஸிஜன் போன்றவை நமது உடலுக்கு நன்மை செய்யும் என்பதால் அச்செடியை ஆன்மிக ரீதியாக மதித்து அதனை பாதுகாத்து துளசி தீர்த்தம் அருந்தும்  வழிமுறையை உண்டாக்கியுள்ளனர்.

6. வணக்கம் கூறுவது: பெரியவர்களைக் கண்டாலோ அல்லது முக்கியஸ்தர்களை கண்டாலோ இரு கைகளையும் கூப்பி மரியாதை அளிக்கும் விதமாக நாம் வணக்கம் சொல்கிறோம் . வணக்கம் செய்யும்போது  இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கிறோம். நமது விரல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து  அழுத்தப்படும் போது பிரஷர் புள்ளிகள் செயல்படுகிறது. இதனால் நமது ஞாபக சக்தி பெருகும் நன்மை கிடைக்கும். நாம் வணக்கம் சொல்லும் நபரையும் நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்கச் செய்யும்.

7. நெற்றிப்பொட்டு: ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது நாம் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் பழக்கம். காரணம் நெற்றியில்தான் ஆக்ஞா  சக்கரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தூண்டப்பட்டு தானாக செயல்படுத் துவங்கி உடலில் உள்ள ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் அறிவு ஒருமுகப்படுத்துதலை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிப் பாதைக்கு வழிகாட்டும் வாசகங்கள்..!
திருமணத்தில் மெட்டி அணிவித்தல்

8. மெட்டி அணிவது: பெண்கள் மெட்டி அணிவது வெறுமனே அலங்காரத்துக்கு மட்டும் இல்லாமல், உடல் நலனுக்காவுமே. பெருவிரலுக்கு அடுத்த விரலில்தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாகச் செல்வதால்  கர்ப்பப்பை வலுவடைந்து மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இதனாலே இந்தப் பழக்கத்தை மணமான பெண்ணுக்கு பழக்கப்படுத்தினர்.

9. கோயில் மணிகள்: நாம் கோயிலுக்குச் செல்லும்போது கோயில் மணி சத்தம் கேட்போம். கோயில் மணி காப்பியம், ஜிங்க், லெட், காப்பர், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனிஸ் போன்ற பல உலோகங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒளியை எழுப்பி இடது மற்றும் வலது மூளையை இணைக்கச் செய்கிறது. மணியிலிருந்து எழும் எதிரொலி நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தொடும். இதனால் மணி ஒலித்த உடனேயே நமது மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி மெய் மறந்த நிலையை அடைவோம். இந்த மெய் மறந்த நிலையில் நமது மூளையின் திறன் மேம்படும் என்பதாலேயே கோயிலில் மணி சப்தம் கேட்கும் வழக்கம் உள்ளது.

10. உணவுக்கு பின் இனிப்பு: நமது உணவில் காரசாரமான பதார்த்தங்கள் அதிகம். இப்படித் துவங்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடியும். காரணம், நம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்தச் செய்வது காரசாரமான உணவுகள் என்பதால் இந்த செயல்பாட்டை குறைத்திடும் இனிப்புகளை உணவருந்திய பின் உண்ணும் வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com