வெற்றிப் பாதைக்கு வழிகாட்டும் வாசகங்கள்..!

motivation image
motivation imageImage credit - pixabay.com

வானம் உங்களது, நீங்கள் விரும்பினால் சொந்தம் ஆக்கிக் கொள்ளலாம்..!

புரிந்துக் கொள்வது ஒரு கலை. ஆனால், ஒவ்வொருவரும் கலைஞர் ஆகிவிடுவதில்லை..!

தோல்வி என்று ஒன்று கிடையாது. நீங்கள் வெற்றி அடையலாம் இல்லாவிட்டால் கற்றுக் கொள்ளலாம்..!

கனவுகள் வேலை செய்வதில்லை. இலக்கை அடைய தாங்கள் செய்யவேண்டும்..!

காலடி எடுத்து முன்னால் வைத்தால் மட்டும் போதாது வெற்றி பெற, சில சமயங்களில் பின் நோக்கியும் வைக்கவேண்டும் பலம் பெற. உதாரணம் கயிறிழுக்கும் போட்டி..!

பட்டாம்பூச்சி பறப்பதற்கு முன்பு பல கட்டங்களைக் கடக்க வேண்டியுள்ளது..!

ஒருநாள் அல்லது நாள் ஒன்று. முடிவு செய்ய வேண்டியது அவரவர் கையில் உள்ளது..!

மேலோட்டமாக காணும் நீரின் ஆழம், தோற்றத்தை விட ஆழமானது..!

உங்களின் எதிர்காலம், உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது..!

எதிர்ப்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள், பெரிய ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்..!

இதையும் படியுங்கள்:
வெஜிடபிள் சூப் மற்றும் மிளகு பூண்டு சூப் செய்யலாம் வாங்க!
motivation image

இடையூறுகள் இன்றியமையாதவை. எதிர்கொண்டு தாண்டிச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

திறமையோடு, பொறுமையையும் வளர்த்துக் கொள்வது பயனளிக்கும்..!

பிறரின் அனுபவங்களும் கற்றுக் கொடுக்கும்..!

தடங்கல்களுக்கு வருந்திக் கொண்டிருக்காமல், முன்னேற முயல்பவர்களுக்கு வெற்றி படிக்கட்டுக்கள் கண்களுக்கு புலப்படும்..!

போட்டிகள் நிறைந்த பயணத்தில் தாங்களும் ஒருவர் என்பதை என்றும் மறக்காதீர்கள்..!

தன்னம்பிக்கை என்ற உந்துகோல் சக்தி, உங்களுடன் பயணம் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்..!

இந்த வாசகங்களின் கருத்துக்கள் முன்னேற பெரிதும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com