கண் திருஷ்டியைப் போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்!

The miracle of rock salt that removes eye Thirushti and attracts money
The miracle of rock salt that removes eye Thirushti and attracts money

ல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. கடல் நீரிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு செல்வ வளத்தைக் கூட்டி, கண் திருஷ்டியையும் போக்குகிறது. ஆன்மிக ரீதியாகவும், சிறந்த வாஸ்து பரிகாரத்துக்கு ஏற்றதாகவும் விளங்குகிறது.

கல் உப்பின் ஆன்மிக ரீதியான பலன்கள்: வெள்ளிக்கிழமைகளில் கல்லுப்பு வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சமையலறையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை கொட்டி வைக்க வேண்டும். அது நிறைய இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அட்சய திருதியையன்று தங்க நகை வாங்கினாலும் கல் உப்பு வாங்கினாலும் இரண்டுமே ஒரே அளவு பலன்தான் கொடுக்கும். அதனால் தங்க நகை வாங்க முடியாதவர்கள், கல் உப்பு வாங்கி வைத்தாலே போதும். செல்வ வளம் பெருகும்.

கல் உப்பு தீபம்: வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு கல் உப்பு தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட்டு, வற்றாத பண வரவு இருக்கும். ஒரு பித்தளை அல்லது தாமிர தாம்பாளத் தட்டில் கல் உப்பை பரப்பி அதன் நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து, அதில் நெய்யோ, நல்லெண்ணெய்யோ ஊற்றி, பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் மகாலட்சுமி தாயார் மனமுவந்து செல்வத்தை பெருக்கச் செய்வாள் என்பது ஐதீகம். மேலும், தீராத நோய்கள் தீர்ந்து, பதவி உயர்வு, குடும்பம் தழைத்தோங்கி வியாபாரத்தில் முன்னேற்றம் போன்றவை கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பெருமாளின் தாடையில் உள்ள வெண்மை நிறத்தின் காரணம் தெரியுமா?
The miracle of rock salt that removes eye Thirushti and attracts money

கண் திருஷ்டியைப் போக்கும் கல் உப்பு: வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும் சக்தி கல் உப்பிற்கு உண்டு. வீட்டின் நுழைவாயிலில், கதவிற்கு பின்புறம் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, அதன் மேல் ஒரு எலுமிச்சம்பழம் மற்றும் நான்கு திசைகளைப் பார்த்தவாறு நான்கு வரமிளகாய் வைத்தால் அது கண் திருஷ்டியை போக்கும். ஒரு வாரம் கழித்து அதை ஒரு காகிதத்தில் போட்டு கால் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் கல் உப்பை புதிதாக மாற்ற வேண்டும்.

வாரம் ஒரு முறை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கல் உப்பை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை அமர வைத்து ஒன்பது முறை அவர்களின் தலையைச் சுற்றி, அந்தத் தண்ணீரை வாஷ்பேஷனில் கொட்டி விடலாம். அது கண் திருஷ்டி அனைத்தையும் போக்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும், வீட்டில் இருப்பவர்களின் எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றி, தீய சக்திகளை விரட்டிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com