நட்பை வளர்த்துக்கொள்வதன் ஆரோக்கியமும் அவசியமும்!

Let's develop friendship
Let's develop friendship
Published on

முற்காலங்களில் அக்கம் பக்கம், எதிர் வீடுகளில் இருப்பவர்களிடம் தினமும் பேசிப் பழகி நட்புடன் வாழ்ந்து வந்தனர் மக்கள். சாதி, மத பேதமோ, அந்தஸ்து வேறுபாடுகளோ அவர்கள் பார்த்தது கிடையாது. ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு அன்புடன் வாழ்ந்தனர். ஆனால், இக்காலத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட யார் என்று, ஏன்… அவர்களின் பெயர்களைக் கூட யாரும் தெரிந்து வைத்துக்கொள்ளவதில்லை.

இளைய தலைமுறையினரோ, ஃபேஸ்புக் நண்பர்களை மட்டுமே வளர்த்துக் கொள்கின்றனர். அடுத்த வீட்டுக்காரர்களையோ, உறவினர்களையோ திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இந்த நவீன யுகத்தில் ஏராளமான அடுக்கு மாடி வீடுகள் வந்துவிட்டன. ஒரே கட்டடத்தில் பல வீடுகள், பல்வேறு மனிதர்கள். எல்லோரும் கூண்டுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

முதியவர்கள் தனிமையில் வாடுகின்றனர். பழைய, இனிய நினைவுகளே அவர்களுக்குத் துணையாக இருக்கின்றன. குடும்பத்தில் எல்லோரும் பள்ளி, அலுவலகம் சென்று விடுவதால் வீட்டிலேயே கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடிவதில்லை. நேரமும் இல்லை.

மேலும், நெருங்கிய சொந்தங்கள், மகன், மகள் கூட கல்வி, வேலை நிமித்தமாக வேறு தேசங்களுக்கோ, மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. சட்டென்று அவர்கள் அவசர, ஆபத்துக்கு வரவோ, உதவவோ முடியாது. அக்கம் பக்கத்தினர்தான் உதவ முடிகிறது. அத்தகையோருக்கு நாம் உதவலாமே. அதனால் முன்போல் பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களுடன் பேசிப் பழகி நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியமான, அவசியமான நடைமுறையாகும்.

இதையும் படியுங்கள்:
சுகர் நோயாளிகள் காளான் சாப்பிடலாமா? திடுக்கிடும் உண்மைகள்! 
Let's develop friendship

கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு முடிந்த வரை நேரில் சென்று அழைப்பு விடுங்கள். வாட்சாப்பில் அழைப்பிதழ் அனுப்பி விட்டால் நம் கடமை முடிந்தது என்று எண்ணுவதை தவிர்த்து விடுங்கள். சகோதர, சகோதரிகளே... யோசியுங்கள். புதுமையுடன் பழைமையை இணையுங்கள். இன்பமாக, சமூகத்துடன் சேர்ந்து ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com