சர்க்கரை நோயாளிகள் அவர்களது ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு உணவுகளை சரியாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். அப்படியும் அவர்கள் தேர்வு செய்து உணவுகளை சாப்பிட்டாலும், சில உணவுகளை சாப்பிடலாமா? கூடாதா? என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. அப்படிப்பட்ட உணவுகளில் காளானும் ஒன்று. சரி வாருங்கள் இந்தப் பதிவில் நீரிழிவு நோயாளிகள் காளான் சாப்பிடுவது சரியா எனத் தெரிந்து கொள்ளலாம்.
காளான்கள் பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் வகைகளில் வளரக்கூடிய ஒரு தனித்துவமான புஞ்சை ஆகும். இவற்றில் கலோரி மற்றும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இவைதான் காளானை ஒரு ஆரோக்கியமான உணவாக மாற்றுகிறது.
நீரிழிவு நோயாளிகள் காளான் சாப்பிடுவதன் நன்மைகள்:
ஒரு உணவு எவ்வளவு விரைவாக ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதைக் குறிப்பதுதான் Glycemic Index (GI). இந்த அளவு குறைவாக இருக்கும் உணவுகள் மெதுவாக ஜீரணிப்பதால் ரத்த குளுக்கோஸ் அளவுகள் மெதுவாகவே உயர்கிறது. காளான்கள் குறைந்த GI அளவைக் கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகள் காளானை சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க உதவி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே காளானை உணவாக எடுத்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
காளானில் விட்டமின் டி, பி, பொட்டாசியம், செலினியம் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் முக்கிய. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இவற்றை உட்கொள்வது நல்லது.
இப்படி பல வகைகளில் காளான்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக இருக்கிறது. எனவே வாரம் ஒரு முறை இதை உணவாக எடுத்துக் கொள்வதால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு சீராக வைத்திருக்க உதவும். இத்துடன் ஊட்டச்சத்து மதிப்பும் அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் காளானை சேர்த்துக் கொள்வது நல்லது.