குளிர்காலத்தில் கார் கண்ணாடியை நொடியில் சுத்தம் செய்ய எக்ஸ்பர்ட்ஸ் சொல்லும் சீக்ரெட்!

Car Fog
Car Fog
Published on

மழைக்காலத்திலோ அல்லது கடும் குளிர் நேரத்திலோ கார் ஓட்டுவது ஒரு தனிச் சுகம் தான். ஆனால், அந்தச் சுகம் கண்ணாடியில் பனிமூட்டம் படியும் வரை மட்டுமே நீடிக்கும். திடீரென்று நம் கண்முன்னே இருக்கும் சாலை தெரியாமல், விண்ட்ஷீல்ட் முழுவதும் வெண்மையாகப் புகை போல மாறிவிடும். அந்தப் பதற்றத்தில் நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், கையில் கிடைத்த துணியை வைத்துத் துடைப்போம் அல்லது ஹீட்டரை அதிகப்படுத்துவோம்.

 இது பல நேரங்களில் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். கார் கண்ணாடியில் படியும் மூடுபனியை, வழக்கத்தை விட இரண்டு மடங்கு வேகமாக விரட்ட ஒரு 'மேஜிக் செட்டிங்' உங்கள் காரிலேயே இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.

ஏன் பனி படர்கிறது? முதலில் எதிரியைப் பற்றித் தெரிந்துகொள்வோம். வெளியே கடும் குளிர் அல்லது மழை; காருக்குள்ளே நாம் விடும் மூச்சுக் காற்று மற்றும் உடல் வெப்பம். இந்த வெப்பமான காற்று, குளிர்ந்த கண்ணாடியில் மோதும்போது நீர்த்திவலைகளாக மாறுகிறது. இதுதான் நம் பார்வையை மறைக்கும் பனிமூட்டம். 

நம்மில் பலர் செய்யும் தவறு, ஹீட்டரை மட்டும் ஆன் செய்துவிட்டு, ஜன்னலை மூடி வைப்பதுதான். இதனால் உள்ளே இருக்கும் ஈரப்பதமான காற்று வெளியேற முடியாமல், மீண்டும் மீண்டும் சுழன்று கண்ணாடியை இன்னும் மறைக்கச் செய்யும்.

சீக்ரெட் ஃபார்முலா!

கார் நிபுணர்கள் மற்றும் ஆய்வுகள் சொல்லும் அந்த ரகசிய செட்டிங் மிகவும் எளிமையானது. பனிமூட்டத்தை விரட்ட உங்களுக்குத் தேவையானது வெப்பம் மட்டும் அல்ல; 'வறண்ட காற்று’. இதைச் செய்ய உங்கள் டேஷ்போர்டில் உள்ள பட்டன்களைக் கீழ்க்கண்டவாறு மாற்ற வேண்டும்.

  1. Fan வேகத்தை நடுத்தரம் அல்லது அதிகபட்சமாக High வைக்கவும்.

  2. Temperature மிக அதிகச் சூட்டில் வைக்காமல், இதமான வெப்பத்தில் வைக்கவும்.

  3. "குளிர்காலத்தில் எதற்கு ஏசி?" என்று நினைக்காதீர்கள். காரில் உள்ள ஏசி கம்ப்ரஸர் ஒரு Dehumidifier போலச் செயல்படும். அதாவது, காருக்குள் இருக்கும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை இது உறிஞ்சி எடுத்துவிடும். எனவே, ஏசி பட்டனைத் தைரியமாக ஆன் செய்யுங்கள்.

  4. காருக்குள் ஒரு அம்பு வளைந்து வருவது போன்ற சின்னம் இருக்கும். அந்தப் பட்டனை கண்டிப்பாக OFF செய்ய வேண்டும். அப்போதுதான் வெளியிலிருந்து வரும் புதிய காற்று உள்ளே வரும்; உள்ளே இருக்கும் ஈரப்பதமான காற்று வெளியேறும்.

செய்யக்கூடாதவை!

பனி படர்ந்தவுடன் அவசரப்பட்டுத் துணியால் அல்லது கையால் கண்ணாடியைத் துடைக்காதீர்கள். நம் கையில் உள்ள எண்ணெய் பிசுக்கு கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு, இரவில் எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சம் படும்போது பார்வையை மறைக்கும். அதேபோல், மிகவும் அவசரம் என்றால், காரின் பக்கவாட்டு ஜன்னலைச் லேசாகத் திறந்து வைப்பது, உள்ளே இருக்கும் ஈரப்பதம் வெளியேற உதவும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வலிமையானவரா? இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருக்கிறதா பாருங்கள்! 
Car Fog

மேலே சொன்ன முறையை நீங்கள் சரியாகச் செய்தால், கண்ணாடியில் உள்ள பனிமூட்டம் சில விநாடிகளில் மறைந்துவிடும். இது வெறும் வசதிக்கான விஷயம் மட்டுமல்ல; உங்கள் குடும்பத்தின் பாதுகாப்போடு தொடர்புடையது. குளிர்காலத்தில் கார் ஓட்டும்போது, பதற்றப்படாமல் இந்தச் சரியான பட்டன்களைப் பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com