நீங்கள் வலிமையானவரா? இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருக்கிறதா பாருங்கள்! 

Strong Man
Strong Man
Published on

வாழ்க்கை  எனும் பயணத்தில் நாம் பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடலாம். அத்தகைய சமயங்களில் மனதின் உறுதி நமக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மனதளவில் வலிமையான நபர்கள் சில குறிப்பிட்ட பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்கிறார்கள். நீங்களும் மனதளவில் வலிமையான நபரா என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை இல்லையென்றாலும், இந்த பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் மன உறுதியைப் பெற முடியும்.

மனதளவில் வலிமையானவர்கள் எப்போதும் தங்களுக்கு கிடைத்திருக்கும் விஷயங்களுக்காக நன்றியுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களிடம் இருக்கும் பொருட்களை பார்த்து பொறாமைப்படவோ அல்லது தங்களுக்கு இல்லாததை நினைத்து வருத்தப்படவோ மாட்டார்கள். தன்னிடம் இருக்கும் விஷயங்களே போதும் என்ற மன நிறைவு அவர்களிடம் இருக்கும்.

அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களுடனோ அல்லது எதிர்மறையான சூழ்நிலைகளுடனோ தங்கள் மனதை போட்டு குழப்பிக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் என்ன பேசினாலும், அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் இவர்களை பாதிக்காது. தங்கள் மனதையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறன் அவர்களிடம் இருக்கும்.

மன உறுதி கொண்டவர்கள் சவால்களை ஒரு வாய்ப்பாக பார்ப்பார்கள். அவர்கள் எப்போதும் வளர்ச்சியை நோக்கியே பயணிப்பார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு வரும் தடைகளை தகர்த்தெறிவார்கள். தோல்விகளை கண்டு துவண்டு போகாமல், அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேறுவார்கள்.

அவர்களின் கவனம் எப்போதும் அவர்கள் எதை கட்டுப்படுத்த முடியும் என்பதிலேயே இருக்கும். அவர்கள் தங்கள் சக்தியை ஆக்கப்பூர்வமான செயல்களில் செலுத்துவார்கள். தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை பற்றி கவலைப்படாமல், முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள்.

தங்கள் நலனை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொள்வார்கள். எப்போது 'வேண்டாம்' அல்லது 'இல்லை' என்று சொல்ல வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக தங்களை வருத்திக்கொள்ளாமல், தங்கள் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அவர்கள் ரிஸ்க் எடுப்பதற்கு பயப்பட மாட்டார்கள். ஆனால், அந்த ரிஸ்க் தகுந்த காரணங்களுடனும், முன்யோசனையுடனும் இருக்கும். அவர்கள் தங்கள் வசதியான வட்டத்தை விட்டு வெளியேற தயங்க மாட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்கள் உணர்வுகளை சமநிலையில் வைத்துக்கொள்வார்கள். ஆபத்து வந்தாலும் சரி, கொண்டாட்டம் வந்தாலும் சரி, உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
40 வயதைக் கடந்த ஆண்கள் தங்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள 5 யோசனைகள்!
Strong Man

கடந்த காலத்தில் நடந்த தவறுகளை நினைத்து வருத்தப்படாமல், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வார்கள். நிகழ்காலத்தில் சிறப்பாக செயல்படுவதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். கடந்த கால நினைவுகளிலேயே மூழ்கி நிகழ்காலத்தை வீணாக்க மாட்டார்கள்.

தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அந்தத் தவறுகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றுவார்கள். தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிப்பதே அவர்களின் இலக்காக இருக்கும்.

வெற்றி என்பது அவர்களுக்கு மற்றவர்களைப் போல இருக்க வேண்டும் என்பதல்ல. தங்களால் முடிந்ததை சிறப்பாக செய்து அதில் வெற்றி காண்பதே அவர்களின் இலக்கு. மற்றவர்களின் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், மனதார கொண்டாடுவார்கள்.

நீங்களும் மனதளவில் வலிமையானவராக இருக்க விரும்பினால், இந்த பழக்கங்களை கடைப்பிடிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களைக் கட்டுப்படுத்தி அடக்கியாளும் வலிமை அவசியமா?
Strong Man

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com