A women with a frog and a milk
Ancient secret to keep milk freshCredits: Ai image

இந்த ஒரு விஷயம் தெரிஞ்சா இனி பாலே குடிக்கமாட்டீங்க! ஆனா அது அந்த காலமுங்க...

பிரிட்ஜ் இல்லாத காலத்தில் பாலை எப்படிப் பாதுகாத்தார்கள்? அந்த ஒரு 'வழுவழுப்பான' ரகசியம் இதோ!
Published on

ம் வீட்டில் பால் கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்வோம்? பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைப்போம். ஆனால் பண்டைய காலத்தில் பால் கெட்டு போகாமல் இருக்க அதுக்குள்ள உயிரோட இருக்கும் தவளையை போட்டுவிடுவார்கள் தெரியுமா? இந்த வித்தியாசமான வழக்கத்தைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

பாலில் இயற்கையாகவே Lactobacillus பாக்டீரியாக்கள் உள்ளன. பால் Room Temperatureல் இருக்கும்போது, இந்த பாக்டீரியாக்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பாலில் உள்ள Lactose எனும் சர்க்கரையை Lactic Acid ஆக மாற்றுகின்றன. இந்த அமிலம் அதிகமாகும்போது பால் புளித்துப்போய் விடுகிறது.

பண்டைய காலத்தில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்ஜ் இல்லாத காலக்கட்டத்தில் பாலை கெட்டுப்போகாமல் பாதுகாக்க விசித்திரமான முறையை பின்பற்றினார்கள். பால் நீண்ட நேரம் புதியதாக (Ancient secret to keep milk fresh) இருக்கவேண்டும் என்பதற்காக, பாத்திரத்தில் உள்ள பாலுக்குள் ஒரு உயிருள்ள தவளையைப் போட்டு வைப்பார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் இதனால் பால் கெட்டுபோகாமல் நீண்ட நேரம் பாதுகாக்க முடிந்திருக்கிறது. இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை என்று நாம் நினைக்கலாம், ஆனால் இதில் ஆச்சரியமான அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன தெரியுமா?

தவளைகளின் தோல் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும். தவளையின் தோலில் இருந்து Peptide என்ற திரவம் சுரக்கிறது. இது இயற்கயாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சையை அழிக்கக்கூடிய ஆற்றலை கொண்டது. இது தவளையை மற்ற Microbes இடம் இருந்து பாதுகாக்கிறது. இவர்கள் பயன்படுத்தி வந்த பிரவுன் தவளை 76 விதமான பெப்டைட்ஸை உருவாக்குகிறது என்று கண்டு பிடித்துள்ளனர். 

இந்த தவளையின் தோலில் இருந்து வரும் சுரபிகள் பாக்டீரியா வளராமல் தடுக்கிறது. இதனால் பால் புளித்துப் போகாமல் நீண்ட நாட்கள் புதிதாகவேயிருக்கும். அந்தத் தவளைகள் பாலில் நீந்திக் கொண்டிருக்கும்போது, அது பாலின் சுவையை மாற்றுவதில்லை என்று அந்தக்கால மக்கள் நம்பினர்.

இது பழைய காலத்தில் பயன்படுத்திய முறை. தற்போது நம்மிடம் எல்லா வசதிகளும் இருப்பதால் வீட்டில் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
பேயை விரட்ட ரத்தத்தை உறிஞ்சிய கொடூர சிகிச்சைகள்... மெடிக்கல் ஹிஸ்டரியின் ஷாக்கிங் உண்மைகள்!
A women with a frog and a milk

இன்று நம்மிடம் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் Pasteurization முறைகள் இருப்பதால் இந்த முறையைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், விஞ்ஞானிகள் இந்தத் தவளைத் தோலில் உள்ள வேதிப்பொருட்களைக் கொண்டு புதிய வகை Antibiotics மருந்துகளை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com