உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் 'சைலண்ட் கில்லர்ஸ்': பணத்தை விழுங்கும் ஓட்டைகள்!

Money-swallowing holes
Empty wallet
Published on

னிதர்கள் வளமாக வாழ போதுமான நிதி தேவை. சரியான நிதிப்பழக்கம் ஒருவருக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். மோசமான நிதிப்பழக்கம் வறுமைக்கு வழிவகுக்கும். சிலர் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பற்றாக்குறை வாழ்க்கையை வாழ்வார்கள். மோசமான பணப் பழக்கங்கள் எவை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மோசமான பணப் பழக்கங்கள்:

1. போதிய வருமானம் இல்லாமை: ஒருவர் தனது அடிப்படை செலவுகளை ஈடுகட்டத் தேவையான அளவு வருமானம் ஈட்ட வேண்டும். இல்லை என்றால் அது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். அத்தியாவசிய தேவைகளை சந்திப்பதற்குக் கூட சவாலாக இருக்கும். ஒவ்வொருவரின் அடிப்படை செலவுகள் வேறுபடும். ஒருவரின் மாத பணத் தேவை பத்தாயிரத்திற்குள் இருக்கலாம். இரண்டாமவரின் மாத தேவை ஒரு லட்சத்திற்குள் இருக்கலாம். இருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப மாத வருமானத்தை ஈட்டுவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
காலி செண்ட் பாட்டிலுக்குள்ள இவ்வளவு 'மேஜிக்' இருக்கா?
Money-swallowing holes

2. நல்ல வேலை தேடாமல் இருத்தல்: தனது மாத செலவுகள், தேவைகளை நன்றாக அறிந்திருந்தும் அதற்கு ஏற்ப சரியான நல்ல வேலை அல்லது தொழிலைத் தேடி, வருமானத்தை அதிகரிப்பதற்கான வழியை தேடாமல் இருப்பது சிக்கல் வர வழிவகுக்கும். நிதி முன்னேற்றத்தைத் தடுக்கும். மேலும், தேக்கமான நிதி நிலையில் வைத்திருக்கும். நல்ல வேலை அல்லது தொழிலைத் தேடி அதற்கு ஏற்ப கடினமாக உழைத்தால் அவர்களும் நன்றாக வாழ முடியும்.

3. வரவுக்கு மீறி செலவு செய்வது: வருமானத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தினால் குறைந்த அளவு சம்பாதித்தாலும் ஒருவர் கடன் வாங்காமல் வாழ முடியும். அதற்கு ஏற்ப தனது தேவைகளை சுருக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த அளவு சம்பளம் வாங்கும்போது கார் போன்ற வசதிகள், அதிக வாடகை கொடுத்து பெரிய வீட்டில் இருப்பது, தேவையில்லாமல் ஊர் சுற்றுவது, ஓட்டலில் உண்பது அதிக பணத்திற்கு துணிகள் வாங்குவது என்று இலக்கில்லாமல் செலவழித்து விட்டு திண்டாடுவார்கள்.

4. அதிக வட்டிக்கு கடன் வாங்குவது: வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். கந்து வட்டியில் ஆரம்பித்து மாதாந்திர தவணையில் பொருட்கள் வாங்குவது, அதிக ஆடம்பரமான பொருட்களை கடனில் வாங்குவது, கிரெடிட் கார்டுகளை நம்பி இருப்பது கடன் சூழலில் சிக்க வைக்கும். மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி வட்டி கட்டவே போய்விடும். மேலும் மேலும் கடன் வாங்கி தன்னுடைய நிதி நிலைமையை சீர்குலைத்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
வழிகாட்டிப் பலகைகளின் நிறங்களுக்குப் பின்னால் இப்படியொரு வியக்கவைக்கும் உளவியல் தகவல்கள்!
Money-swallowing holes

5. சேமிக்கும் பழக்கம் இல்லாதது: ஒருவர் எவ்வளவு குறைவாக வருமானம் ஈட்டினாலும் சேமிப்பிற்கு என்று தனியாக ஒரு தொகையை எடுத்து வைத்த பின்புதான் மாதாந்திர பட்ஜெட் போட வேண்டும். பலர் செய்யும் பெருந்தவறு செலவு செய்து விட்டு பின்பு சேமிக்கலாம் என்று எண்ணுவதுதான். ஒருவர் பத்தாயிரம் ரூபாய் மாதம் சம்பாதிக்கிறார் என்றால் 2000 ரூபாயை முதலிலேயே சேமிப்பிற்கு என்று ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 8000 ரூபாயில்தான் செலவுகளை சமாளிக்க வேண்டும்.

6. போதிய நிதிக்கல்வி இல்லாமை: பணம் சேமிக்கும் அல்லது பணத்தை பெருக்கும் நிதி கல்வி ஒருவருக்கு அவசியம் வேண்டும். சேமிப்போடு சரியான முதலீடுகளை செய்ய வேண்டும். கூட்டு வட்டி தரும் முதலீடுகளில் பணத்தை போட வேண்டும். நல்ல ரிட்டர்ன்ஸ் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பாதுகாப்பான நிதி முதலீடுகளைத் தகுந்த ஆலோசனை தருபவரிடம் கேட்டு அறிந்து அதற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். சரியான நிதி பழக்கங்களை கடைப்பிடித்தால் ஒருவர் குறைவாக சம்பாதித்தாலும் நன்றாக வாழ முடியும்.

எஸ்.விஜயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com