பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதன் உண்மை என்ன தெரியுமா? 

Woman ankle
Woman ankle
Published on

தற்காலத்தில் இளம் பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு அணிவது ஒரு நாகரிகமாகப் பரவி வருகிறது. வெறும் கயிறுடன் மட்டுமல்லாமல், அதில் சிறிய லாக்கெட்டுகள், மணிகள் போன்றவற்றை இணைத்தும் அணிகின்றனர். இது ஒரு புதிய ட்ரெண்டாகத் தோன்றினாலும், நமது முன்னோர்கள் காலம் காலமாகப் பின்பற்றி வரும் ஒரு பாரம்பரியப் பழக்கத்தின் நீட்சியாகவே இது பார்க்கப்படுகிறது. 

உடல்நலக் குறைபாடு, விபத்துகளிலிருந்து மீண்டவர்கள், கண் திருஷ்டி நீங்க இந்தக் கயிற்றை அணிவதுண்டு. ஜோதிட சாஸ்திரங்களின்படி, காலில் கருப்பு கயிறு அணிவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. யார் இந்தக் கயிற்றை அணியலாம், யார் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய சில நம்பிக்கைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாரம்பரியமாக, சிலரின் பார்வைக்குத் தீய சக்தி உண்டு என்றும், அது மற்றவர்களைப் பாதிக்கும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் மீது தீய கண்கள் படாமல் இருக்க, அவர்களுக்குக் கன்னத்தில் கருப்புப் பொட்டு வைப்பது அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவது வழக்கம். இது தீய சக்திகளை அண்ட விடாது என்ற நம்பிக்கை நிலவுகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து இந்தக் கயிறு கட்டும் வழக்கம் தொடங்கியதாக ஒரு கருத்து உண்டு.

சிலருக்கு அடிக்கடி உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களுக்குக் காலில் கருப்பு கயிறு, தலைமுடியால் ஆன கயிறு கட்டுவார்கள். இது கண் திருஷ்டியை நீக்கி, உடல்நலத்தை மேம்படுத்தும் என்பது ஐதீகம். காலில் மட்டுமல்லாமல், கை, கழுத்து, இடுப்பிலும் கருப்பு கயிறு அணிவதுண்டு. கருப்பு நிறத்திற்குத் தீமையை விரட்டும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இருளில்தான் தீய சக்திகள் இருக்கும் என்றும், கருப்பு நிறம் அந்த இருளைக் குறிப்பதால் தீய சக்திகளை அண்ட விடாது என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

ஜோதிட ரீதியாகப் பார்க்கும்போது, சனி பகவான் ஒருவரின் கால்களைத்தான் முதலில் பாதிப்பார் என்று கூறப்படுகிறது. எனவே, காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் சனி தோஷத்தின் பாதிப்பைக் குறைக்கலாம் என்றும், ராகு மற்றும் கேதுவின் எதிர்மறை தாக்கங்களிலிருந்தும் இது பாதுகாக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்தக் கயிற்றைக் கட்டுவதற்கு முன்னர், சனி தேவ மந்திரத்தை 21 முறை ஜபிக்க வேண்டும் என்பது ஒரு விதியாகும்.

இதையும் படியுங்கள்:
டாப் 10 உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் எவை தெரியுமா?
Woman ankle

பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று சனி பகவானை வணங்கி காலில் கருப்பு கயிறு கட்டினால், பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது தனிநபருக்கு மட்டுமல்லாமல், அவர்கள் வசிக்கும் வீட்டிற்கும் பணப் பற்றாக்குறை ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்தக் கயிற்றைக் கட்டும்போது, அதில் ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும் என்பதும் ஒரு சம்பிரதாயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com