டாப் 10 உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் எவை தெரியுமா?

டாப் 10 உலகின் மிகப்பெரிய பொருளாதார வளமிக்க நாடுகளை, அதன் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவரிசைப்படுத்தியுள்ளது.
largest economies countries
largest economies countries
Published on

உலகின் மிகப்பெரிய டாப் 10 பொருளாதார வளமிக்க நாடுகளை, அதன் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவரிசைப் படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் சமீபத்தில் பாகிஸ்தான் கடன் கேட்டு நின்றது. அந்த நிதியத்தின் தரவுகளில் இந்தியாவின் வலிமை எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் நாம் காணலாம்.

இந்த தர வரிசையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தரவுகளின் அடிப்படையில் அமைத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் ஓட்டு மொத்த உற்பத்தி திறனை பொருளாதார ரீதியில் அளவீடு செய்வதாகும். இதில் நுகர்வு, முதலீடு, அரசாங்கச் செலவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் மதிப்பையும் கணக்கில் கொள்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நாட்டின் பொருளாதார சக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.

உலகின் முதல் 10 பொருளாதார வலிமை மிக்க நாடுகள்:

1. அமெரிக்கா

பொருளாதார வலிமையில் மீக நீண்ட காலமாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடாகும். அதன் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி $30.507 டிரில்லியனாக உள்ளது. அதே நேரம் அமெரிக்காவில் தனிநபர் வருடாந்திர வருமானம் $89,105 என்ற அளவில் உள்ளது.

2. சீனா

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வலிமை மிக்க நாடாக சீனா உள்ளது. இது அமெரிக்காவிற்கு போட்டியாக கருதப்பட்டாலும் போதுமான இடைவெளியில் சீனா பின்னே உள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $19.231 டிரில்லியன் ஆகும். சீனாவின் தனிநபர் ஆண்டு வருமானம் $13,657 ஆகும்.

3. ஜெர்மனி

பொருளாதார தரவரிசையில் ஜெர்மனி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி மிகவும் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றுள்ளது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.744 டிரில்லியன் ஆகவும் தனிநபர் ஆண்டு வருமானம் $55,911 ஆகவும் உள்ளது.

4. இந்தியா

தரவரிசையில் 4 ஆம் இடத்தில் உள்ள இந்தியா, சமீபத்தில் ஜப்பான் மற்றும் பிரிட்டனை பின்தள்ளி முன்னேறியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.187 டிரில்லியன் ஆகவும் , அதன் தனிநபர் ஆண்டு வருமானம் $2,934 என்ற அளவில் குறைவாகவும் உள்ளது.

5. ஜப்பான்

உழைப்பிற்கு பெயர் போன ஜப்பான் நாடு, $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்நாட்டின் தனிநபர் ஆண்டு வருமானம் $33,955 ஆகும்.

6.பிரிட்டன்

இந்த நாடு சமீப காலமாக இறங்குமுகத்தில் உள்ளது. ஆயினும் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.839 டிரில்லியன் ஆகவும் தனிநபர் ஆண்டு வருமானம் $54,949 ஆகவும் உள்ளது.

7. பிரான்ஸ்

உலகின் ஏழாவது பெரிய பொருளாதார வலிமை மிகு நாடாக பிரான்ஸ் உள்ளது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.211 டிரில்லியன் மற்றும் தனிநபர் ஆண்டு வருமானம் $46,792 ஆகும்.

8. இத்தாலி

உலகின் ஏழாவது பெரிய பொருளாதார வலிமை மிகு நாடாக, கலாச்சார பெருமை மிகுந்த இத்தாலி உள்ளது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.211 டிரில்லியன் ஆகவும் தனிநபர் ஆண்டு வருமானம் $41,091 ஆகும்.

இதையும் படியுங்கள்:
2030ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடு: சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தகவல் !
largest economies countries

9. கனடா

தரவரிசையில் 9 வது இடத்தைப் பிடித்த கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $2.225 டிரில்லியன் ஆகும். மேலும் அதன் தனிநபர் வருமானம் $53,558 ஆகும்.

10. பிரேசில்

உலகின் பத்தாவது பெரிய பொருளாதார வலிமை மிகு நாடாக பிரேசில் உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $2.125 டிரில்லியன் ஆகவும், தனிநபர் ஆண்டு வருமானம் $10,234 ஆகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
நாட்டின் பொருளாதார நிலை: ஏன் அனைவரும் கடன் வாங்குகிறார்கள்?
largest economies countries

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com