மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் இந்த 10 பரிசோதனை ரொம்பவும் முக்கியம்!

மாஸ்டர் ஹெல்த் செக்கப்
Published on

ம் குடும்பத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் கண்டிப்பாக ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் நாம் ஆரோக்கியத்தின் மீதே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் இந்த 10 பரிசோதனைகளும் மிக முக்கியமானது. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. உடல் எடை, உயரம்: உடல் எடை, உயரம் ஆகியவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் ஒருவரின் பி.எம்.ஐ. எவ்வளவு எனக் கண்டறிய முடியும். ஒருவர் அதிக உடல் பருமன் உடையவரா இல்லையா என்பதை பி.எம்.ஐ. அளவைக் கணக்கிடுவதன் மூலம் அறியலாம்.

2. இரத்த அழுத்தம்: உடலில் உள்ள சிஸ்டாலிக் இரத்த அழுத்தம், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஆகியவற் றின் மூலம் உடலில் இரத்த ஓட்டம் எந்த நிலையில் உள்ளது எனக் கண்டறியலாம்.

3. இரத்தப் பரிசோதனைகள்: இரத்தப் பரிசோதனைகள்தான் மாஸ்டர் ஹெல்த் செக்-அப்பின் அடிப்படை. சுமார் இரண்டு மி.லி. அளவில் மூன்று சாம்பிள்கள், அதாவது மொத்தம் ஆறு மி.லி. இரத்தம் எடுக்கப்படும். இந்த இரத்தத்தைக் கொண்டு, ஹீமோகிராம், பயோகெமிக்கல் பாராமீட்டர், கொழுப்பு அளவு, கல்லீரலின் நிலை போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

4. ஹீமோகிராம்: இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, செல்களின் அடர்த்தி, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் சராசரி விகிதம் ஆகிய பரிசோதனைகள் இதில் செய்யப்படுகின்றன.பிளாஸ்மா எனும் இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையைப் பரிசோதிப்பதன் மூலம் இரத்தம் உறையும் வாய்ப்பைக் கண்டறியலாம்.

 5. மலப் பரிசோதனை: இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செய்யப்படுகிறது. சமீபமாக, குடல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவதால், இந்தப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது.

6. மார்பக எக்ஸ்ரே: மார்புப் பகுதியை எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் இதயம், நுரையீரல், மூச்சுக்குழாய் உள்ளிட்ட உள்ளுறுப்புகளின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

7. இ.சி.ஜி.: இதயத்தின் செயல்பாட்டை அறிய இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இதயத் துடிப்பின் அளவு, வேகம் போன்றவற்றைக் கண்டறியலாம்.

இதையும் படியுங்கள்:
பாதங்கள் மனித உடலின் எடை தாங்கி மட்டுமா?
மாஸ்டர் ஹெல்த் செக்கப்

8. கல்லீரல் செயல்பாடு: இரத்தத்தில் உள்ள புரதம் அல்புமின் குளோபுலின் அளவு, அல்கலைன் பாஸ்பட் டேஸ் எனும் காரத்தன்மையின் அளவு, எஸ்.பிளிருபின் அளவு போன்றவற்றைக் கணக்கிடுவதன் மூலம் கல்லீரலின் செயல்பாடு எப்படி உள்ளது என்று கணிக்கலாம். இவற்றில் மாறுபாடு இருந்தால் மஞ்சள் காமாலை, லிவர் சிர்ரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

9. தைராய்டு பரிசோதனைகள்: இரத்தத்தில் உள்ள டி3, டி4, டி.எஸ்.ஹெச். சுரப்புகளின் அளவு பரிசோதிக்கப்படுவதன் மூலம் தைராய்டு சுரப்பி எந்த நிலையில் உள்ளது. தைராய்டு பாதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பனவற்றைக் கண்டறியலாம். தைராய்டு பிரச்னைகள் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகின்றன என்பதால், இந்தப் பரிசோதனை பெண்களுக்கு அவசியம் செய்யப்படுகிறது.

10. சிறுநீர் பரிசோதனைகள்: சிறுநீரக மாதிரிகள் மூலம் யூரியாவின் அளவு மற்ற உப்புக்கள் போன்றவற்றைப் பரிசோதிக்கலாம். இதன் முலம் சிறுநீரகத்தின் செயல்பாடு எப்படி உள்ளது எனக் கண்டறிய முடியும். யூரியா போன்ற உப்புக்களின் அளவு மாறுபடுவது சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகளை கண்டறியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com