வீடு கட்டும்போது கவனிக்க வேண்டியவை!

பார்த்துப் பார்த்து கட்டிய அந்த வீட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
House
House
Published on

வீடு கட்ட போகிறோம் என்றால் அதன் ஒவ்வொரு செயலையும் ரசிப்போம். வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது கட்டடப் பணியாளர்கள் சேர்ந்து விஜயதசமி தினத்தன்று கல்லுடைக்கும் நிகழ்ச்சியை நடத்துவார்கள். அப்பொழுது அந்த மேசன், பணியாளர்கள் அனைவருக்கும் அன்பான பரிசுதனை அளிப்பார். அவர்கள் அனைவரும் சேர்ந்து மேசனுக்கு ஒரு பரிசை அளிப்பார்கள். இப்படியாக கல் உடைத்தல் நிகழ்வு நடைபெறும். இது போல் வீடு கட்டுவதை நின்று வேடிக்கையாகப் பார்ப்பது, ஒவ்வொரு அறையாக சென்று விளையாடுவது என்பது நமக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அப்படி பார்த்துப் பார்த்து கட்டிய அந்த வீட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.

மகாபாரதத்தில் அனு சாஸன பர்வதத்தில் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால், அமாவாசை தினத்தில் மரத்தை வெட்டுவது மற்றும் மரத்திலிருந்து இலைகளை உதிர்க்க செய்வதும் கூட பாவமான செயலாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கோழி, நாய், முளைத்து விட்ட மரம், உடைந்த பாத்திரங்கள், உடைந்த கட்டில்கள், உடைந்த ஆசனங்கள் முதலியன வீட்டிற்குள் இருக்கக்கூடாது.

வீடுகள் தூய்மையாக இருக்க வேண்டும். வீட்டினுள் எப்பொழுதும் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

வடக்கிலும் மேற்கிலும் தலை வைத்துப் படுக்கக் கூடாது. நின்று கொண்டோ நடந்து கொண்டோ சாப்பிடக்கூடாது. ஈரக்காலுடன் சாப்பிடலாம். ஆனால் ஈரக்காலுடன் படுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

வீடு கட்டும் பொழுது இரும்பு ஸ்க்ரூக்களை மர வேலைகளுக்கு அதிகமாக பயன்படுத்துவதை பார்ப்போம். இரும்பு ஸ்க்ரூக்களுக்குப் பதிலாக பித்தளை ஆணிகளை மரவேளையில் பயன்படுத்தினால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

கதவில் பார்க்கும் துளை (Vision hole) அல்லது கண்ணாடி அடுக்குகளை கதவுகளில் அமைக்கக் கூறலாம். இதனால் உள்ளிலிருந்து வெளியில் யார் வந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும்.

கதவுகளில் தாழ்ப்பாள் பொருத்தும் போது தாழ்ப்பாளின் கம்பி படியும் மரச் சட்டத் துளைகளில் அலுமினிய குழாய்களை பொருத்தக் கூறலாம். இப்படி செய்வதால் துளையின் இடைவெளி காலப்போக்கில் பெரிதாவதை தவிர்க்க முடியும்.

ஜன்னல் கதவுகளின் உள் பக்கங்களில் அலுமினிய கைப்பிடி வளையங்களைப் பொருத்தினால் கதவுகளை மூடும் போது இவை நல்ல பிடிமானமாக அமையும்.

ஜன்னல் கதவுகளின் வெளிப்புறங்களில் ரப்பர் தடுப்பான்கள் பொருத்த வேண்டும். இதனால் ஜன்னல் கதவுகள் சுவற்றில் அடிபடாமல் பாதுகாக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக குளியலறை கதவுகளில் பொருத்தப்படும் தாழ்ப்பாள்கள் சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும்.

சில சமயங்களில் மொட்டை மாடி, கழிவறை குழாய்களுக்கு அருகில் அரசு, வேம்பு போன்ற செடிகள் வளர்வது உண்டு. இவைகள் பறவைகளின் எச்சத்தில் இருந்து முளைப்பது. இவைகளை அவ்வப்பொழுது பிடுங்கி விட வேண்டும். அல்லது அடியோடு வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் அதன் வேர் பகுதியில் மயில் துத்த கரைசலை (காப்பர் சல்பேட்) அல்லது (ஹைட்ரோ குளோரிக்) அமிலம் பூசி மேலும் வளர விடாமல் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வெடிப்புகள் எதுவும் இன்றி சுவர்கள் பலமாக இருக்கும். மழை பெய்தாலும் அந்த தண்ணீர் சுவற்றுக்குள் ஊறி ஓதம் கொள்ளாமல் இருக்க வழி வகுக்கும். இது போல் மரம் வளர்வதை நிறைய பேர் பார்த்திருப்போம். அதை களையாமல் விடுவதால் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. அதுபோல பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கான வழியை தெரிந்து கொண்டால் வீட்டை சரிவர பராமரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
புது வீடு - வாஸ்து - அடிப்படை விதிகளைக் கவனியுங்கள் மக்களே!
House

மேலும் வீடு கட்டி முடித்தவுடன் கட்டடம் கட்டும்பொழுது சில மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தால் திருத்தப்பட்ட பிளான்களை உரிய அரசாங்க அலுவலகத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற்று விட வேண்டும். மேலும் எல்லா விதமான தெளிவான வரைபடங்களையும், மின் இணைப்பு செய்யப்பட்டது முதல் பிளம்பிங் அமைப்புகள் காட்டும் பிளான்கள், கம்பி கட்டிய முறை என்று அனைத்து விபரங்களையும் பத்திரமாக கைவசம் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

புது வீடு கட்டி முடித்த தேதி, வீட்டில் குடியிருந்த தேதி போன்ற தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து வீட்டு வரி கட்டுவதற்கான நோட்டீசை பெற்று வரியை செலுத்த ஆயத்தமாக வேண்டும்.

"யானை அசைந்து தின்னும். வீடு அசையாமல் தின்னும்" என்பது பழமொழி. அதற்கு ஏற்ப மேலும் வீட்டை பராமரிக்க தேவையான செலவுகள் மற்றும் வரிகள் போன்ற செலவுகள் செய்ய வேண்டி இருக்கும் என்பதால், அதற்கான செலவிற்காக மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்திருந்தால் வீட்டை பராமரிப்பதில் கஷ்டம் தெரியாது. வீடும் அழகு பெறும். நாமும் வீட்டை கட்டிப் பார்த்து விட்டோம் என்று மனதில் நிம்மதி வரும்.

இதையும் படியுங்கள்:
வீடு கட்டி வாடகைக்கு விடுவது லாபகரமானதா?
House

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com