Second-Hand பைக் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

Second-Hand Bike
Things to Consider When Buying a Second-Hand Bike
Published on

செகண்ட் ஹேண்ட் பைக் வாங்குவதென்பது பலருக்கு செலவைக் குறைப்பதற்கான ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இருப்பினும் இதில் நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். செகண்ட் ஹேண்ட் பைக் வாங்குவதில் உள்ள ஆபத்துக்களைத் தவிர்க்க, சில முக்கியமான காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம். 

உங்களது தேவை:  நீங்கள் செகண்ட் ஹேண்ட் பைக் வாங்குவதற்கு முன், உங்களுக்கான பைக்கை தேர்ந்தெடுக்க உங்களது தேவைகளை மதிப்பிடுங்கள். நீங்கள் எதற்கு அந்த பைக்கை பயன்படுத்த போகிறீர்கள், எதுபோன்ற இடத்தில் பயன்படுத்தப் போகிறீர்கள், மற்றும் எவ்வளவு தூரம் ஒரு நாளைக்கு பயணிப்பீர்கள் என்பது போன்ற அம்சங்கள் அனைத்தையும் கணக்கிட்டு சரியான பைக்கை தேர்ந்தெடுக்கவும். 

பட்ஜெட்: நீங்கள் எவ்வளவு விலையில் பைக் வாங்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கவும். நீங்கள் என்ன பைக் வாங்கப் போகிறீர்களோ அதன் சராசரி விலையைப்பற்றி நன்கு ஆராய்ச்சி செய்யவும். குறிப்பாக நீங்கள் முடிவெடுத்துள்ள பட்ஜெட்டில் நல்ல தரமான பைக்கை வாங்குவது அவசியம். அதற்கு ஏற்றவாறு உங்களது பட்ஜெட்டை தீர்மானம் செய்யுங்கள். 

ஆராய்ச்சி: செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கும்போது பல இடங்களில் தேடிப் பார்ப்பது முக்கியமானது. உள்ளூர் பைக் கடைகள், விளம்பரங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் வாயிலாக பைக்குகளை தேடிப் பார்க்கவும். உங்களுக்கு விருப்பமான பைக்கை கண்டறிந்ததும், நேரில் சென்று அதன் நிலையை பரிசோதித்து பாருங்கள். தேய்மானம், துரு, சேதம் மற்றும் அதன் செயல்திறன் போன்றவற்றை கவனிக்கவும். மேலும் சக்கரங்கள், டயர்கள், செயின்ஸ் ஸ்ப்ராக்கெட், பைக் பிரேம் போன்ற அனைத்தையும் சோதிக்கவும்.

வரலாறு: நீங்கள் வாங்க விரும்பும் பைக்கை யார் பயன்படுத்தினார்கள்? எதற்காக பயன்படுத்தினார்கள்? என்பது போன்ற வரலாற்றை கேட்டு அறிந்துகொள்ளவும். நன்கு பராமரிக்கப்பட்ட பைக்கில் குறைவான பாதிப்புகள் இருக்கலாம். இதனால் நீங்கள் வாங்கிய பிறகு உங்களுக்கு எந்த பிரச்சினைகளையும் அது கொடுக்காது. 

ட்ரையல்: வாகனத்தை வாங்க உறுதி செய்வதற்கு முன் பைக்கை சோதனை ஓட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். ஓட்டிப் பார்க்கும்போது அதன் கிளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர், கியர் என அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கவும். வண்டியை ஓட்டும்போது ஏதேனும் அசாதாரண சத்தம் அல்லது பிரச்சினைகளை கவனித்தால், அது என்ஜின் கோளாறை குறிக்கலாம். 

ஆவணங்கள்: பைக்கை நன்கு ஆய்வு செய்ததும், விற்பனையாளரிடம் பைக்கின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் நிஜமானதா என்பதை சோதித்துப் பார்க்கவும். வாகனத்தின் ஆர்சி புக், இன்ஷூரன்ஸ் அனைத்தையும் சரிபார்க்கவும். 

இதையும் படியுங்கள்:
நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!
Second-Hand Bike

இறுதியில் எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகு நீங்கள் திருப்தி அடைந்தால், விற்பனையாளரிடம் விலையைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள். பைக்கின் மதிப்பு உங்கள் விலைக்கு ஒத்துப் போகவில்லை என்றால், வேண்டாம் என விட்டுவிடுவது நல்லது. பணம் செலுத்தும்போது மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, வங்கி பரிமாற்றம் அல்லது ஆன்லைன் பேமெண்ட் போன்ற பாதுகாப்பான முறையைப் பயன்படுத்தவும். 

இப்படி, செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கும்போது எல்லா விஷயங்களையும் கவனத்தில் கொண்டு பைக் வாங்குங்கள். இது எதிர்காலத்தில் உங்களை எந்த பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com