குழந்தைகளின் உயரம் அதிகரிக்க இதை செய்தாலே போதுமே!

increase height in children
increase height in children
Published on

குழந்தை உயரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை பெற்றோர்கள் மத்தியில் பொதுவானது. உயரம் என்பது வெறும் உடல் அளவு மட்டுமல்ல, இது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. ஒருவரின் வளர்ச்சி என்பது மரபணுக்கள் முதல் உணவு, உடற்பயிற்சி வரை பல காரணிகளை உள்ளடக்கியது. இந்தப் பதிவில் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் முக்கியமான 6 விஷயங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சமச்சீர் உணவு: சமச்சீர் உணவு என்பது குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். புரதம், கால்சியம், விட்டமின் டி, விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானவை. பால், முட்டை, மீன், பருப்பு வகைகள், பச்சை இலைக் காய்கறிகள் போன்ற உணவுகள் குழந்தைகளின் உணவில் அவசியம் இருக்க வேண்டும். முடிந்தவரை இனிப்பு பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

போதுமான தூக்கம்: தூக்கம் என்பது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். குழந்தைகள் வளரும்போது அவர்களின் உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. போதுமான தூக்கம் இல்லாததால் இந்த செயல்பாடு பாதிக்கப்படலாம். எனவே, குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றவாறு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக, குதித்தல், ஓடுதல் போன்ற பயிற்சிகள் எலும்புகளை வலுப்படுத்தி உயரத்தை அதிகரிக்க உதவும். கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுக்கள் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. 

சூரிய ஒளி: சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தி உயரத்தை அதிகரிக்க உதவும். எனவே, குழந்தைகளை தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை… நீங்கள் மன உளைச்சலில் இருக்கிறீர்கள்! 
increase height in children

மன அழுத்தம் குறைத்தல்: மன அழுத்தம் ஒருவரது உடல் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். எனவே, குழந்தைகள் மன அழுத்தம் இல்லாத சூழலில் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.‌ மன அழுத்தத்தை நிர்வகிக்க தியானம், யோகா போன்ற நுட்பங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். 

மருத்துவ ஆலோசனை: சில குழந்தைகளுக்கு உயரம் குறைவாக இருப்பதற்கு மரபணு காரணமாக இருக்கலாம். அல்லது ஏதேனும் ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கும். எனவே, குழந்தையின் உயரம் குறித்து கவலை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் குழந்தைகளின் இயற்கையான வளர்ச்சியை நீங்கள் ஊக்குவிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் வேறுபட்டது. எனவே, ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com