இந்த 6 அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை… நீங்கள் மன உளைச்சலில் இருக்கிறீர்கள்! 

6 signs that someone is depressed
6 signs that someone is depressed
Published on

இன்றைய காலத்தில் மன உளைச்சல் என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. வேலை, குடும்பம், சமூக அழுத்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மன உளைச்சலை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்தப் பதிவில் ஒருவர் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதற்கான 6 முக்கிய அறிகுறிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

மன உளைச்சலின் முக்கிய அறிகுறிகள்: 

  1. மன உளைச்சலில் உள்ளவர்கள் பொதுவாக தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். இரவில் தூக்கம் வராமல் தவிப்பது, அடிக்கடி விழித்துக் கொள்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சிலர் மன உளைச்சலின் காரணமாக அதிகமாக தூங்கும் நிலைக்கும் செல்லலாம். 

  2. மன உளைச்சல் உள்ளவர்கள் பொதுவாக உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை அனுபவிப்பார்கள். சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள், ஒரு சிலர் ஒன்றுமே சாப்பிடாமல் இருப்பார்கள். இது உடல் எடை அதிகரிக்கவோ, குறையவோ வழிவகுக்கும்.‌ 

  3. ஒருவர் எளிதில் எரிச்சல் அடைந்தால் அவர் மன உளைச்சலில் உள்ளார் என அர்த்தம். சிறிய விஷயங்களுக்காகவும் கோபம் கொள்வார்கள். பொறுமையின்மை, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகளும் அவர்களுக்கு இருக்கும். 

  4. மன உளைச்சல் உள்ளவர்கள் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். உடல் வலிகள், தலைவலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். 

  5. எந்த விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்றால் அது மன உளைச்சலில் முக்கியமான அறிகுறி. வேலை செய்யும்போது அல்லது படிக்கும்போது மனம் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும். 

  6. மன உளைச்சலால் ஒருவரது மதிப்பு குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டு தனிமைப்படுத்திக் கொண்டு பல பிரச்சினைகளில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள். 

இதையும் படியுங்கள்:
மன இறுக்கத்தைப் போக்கி மகிழ்ச்சியை மலரச் செய்யும் 5 யோசனைகள்!
6 signs that someone is depressed

நீண்ட காலம் மன உளைச்சலில் இருப்பது எளிதில் சிகிச்சை அளிக்கக்கூடிய பிரச்சனையாகும். மேற்கூறிய அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால், ஒரு மனநல மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. மனநல மருத்துவர் உங்களுக்குத் தேவையான சிகிச்சையை வழங்கி உங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவார். மன உளைச்சலுக்கு பயப்படாமல் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com