இல்லறம் இனிமையாக கணவன், மனைவியிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

Happy Family
Happy Family
Published on

பொதுவாக குடும்பத்தில், ‘நாம் சொல்வதைத்தான் கணவர் கேட்க வேண்டும்’ என்று நினைக்கும் பெண்கள் 99 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இது பெண்களுக்கே உரிய ஒரு இயல்பான குணம் என்று சொல்லலாம். ஆனால், ஆண்கள் அப்படி நினைப்பதில்லை. அதிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ‘நம் சொல்படிதான் மனைவி நடக்க வேண்டும்’ என்று நினைப்பதுண்டு.

கணவன், மனைவி உறவு என்பது ஆயிரம் காலத்துப் பயிரல்ல, அது ஆயுசு பயிர் என்று சொன்னால் அது மிகையில்லை. கணவனும் மனைவியும் கீழ்க்காணும் இந்த ஐந்து விஷயத்தில் கவனம் செலுத்தினாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

1. மரியாதை: ஒவ்வொரு ஆணும் தனது மனைவி தன்னை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எப்படிப்பட்ட சூழலிலும் தனக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், பல நேரங்களில் சில காரணங்களால் பெண்களால் இதைச் செய்ய முடியாது. இதனால் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கும். எனவே, உங்கள் குடும்ப உறவு வலுவாக இருக்க விரும்பினால், இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. பாராட்டு: ஆண்கள் தனது மனைவி எப்போதும் தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எந்த ஒரு விஷயத்திலும் மனைவி தமது உணர்வுகளை புரிந்து கொண்டு தமக்கு ஆதரவாகவும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தம்முடன் அமர்ந்து ஆறுதல் அளிக்கவும் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

3. ஒவ்வொரு விஷயத்திலும் ஆதரவு: தனது மனைவி ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கு பின்பலமாக இருக்க வேண்டும் என்பது கணவர்களின் விருப்பமாக உள்ளது. அது வீட்டுப் பிரச்னையாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவிதமான நிதிப் பிரச்னையாக இருந்தாலும் சரி. எந்த ஒரு பிரச்னையிலும் மனைவி தம் கணவரின் பின்னால் உறுதியோடு நின்றால், அவர்களின் உறவு மிகவும் உறுதியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
முதுமைக்கால நோய்களைத் தவிர்க்க ஆராய்ச்சி முடிவுகள் கூறும் ஆலோசனைகள்!
Happy Family

4. பகிர்ந்து கொள்ளுதல்: கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுடன், எண்ணங்களை பகிர்ந்துகொள்வதும் அவசியம். நீங்கள் உங்கள் கணவரை புரிந்து கொண்டால் அவர் தனது எல்லா பிரச்னைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வார். எந்த விஷயத்திலும் கணவருக்கு எதிராக நீங்கள் நியாயம் கற்பிப்பதை அவர் விரும்புவதில்லை. அவர் தனது உணர்வுகளை உங்களிடம் சுதந்திரமான மனதுடன் வெளிப்படுத்தும் வகையில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். மேலும், அவரை ஒருபோதும் தாழ்த்தி பேசக் கூடாது. கணவரின் ரசனைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

5. நேரத்தைச் செலவிடுதல்: கணவன்மார்கள் தம் மனைவியுடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறார்கள். அப்போது குடும்ப பிரச்னைகளைத்தான் பேச வேண்டும் என்பதில்லை. மாறாக, இருவரும் ஒன்றாக அமர்ந்து, மகிழ்ச்சியாக, சுவாரசியமாக அரட்டை அடிக்கலாம். அது அழகான நினைவுகளை உருவாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com