முதியோர்களை நோய்கள் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆய்வு மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டின் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முதியோர்கள் மனதளவில் இளமையாக நினைத்துக் கொண்டால் முதியோருக்கான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர். நீங்கள் உஙகளை இளைஞராக நினைத்துக் கொண்டால் இருதய நோய், புற்று நோய் போன்ற நோய்கள் கூட கொஞ்சம் உங்களை விட்டு ஒதுங்கியே இருக்கும் என்கிறார்கள்.
பொதுவாக, முதியோர்களின் மனக் குழப்பத்திற்கு காரணமாக இருப்பது நீர்ச்சத்து குறைபாடுதான். எனவே, தினமும் சரியான அளவு அவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க உடன் இருப்பவர்கள் வலியுறுத்த வேண்டும். முதியோர்கள் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் அது இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைக் குறைக்கும். அதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறையும் என்கிறார்கள்.
பொதுவாக, வயதானவர்களுக்கு கோபம் அதிகம் வரும். அதனால் ஒரு நன்மையும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வயதானவர்களின் கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மீன்களில் உள்ள ஒமேகா 3 சத்து உதவுகிறது. எனவே, அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அமெரிக்காவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
வீட்டில் வயதானவர்கள் அடிக்கடி, ‘நான் அந்தக் காலத்தில் இப்படி இருந்தேன், அப்படி இருந்தேன்’ என்று மலரும் நினைவுகளில் மூழ்கி விடுகிறார்களா? அவர்களுக்கு ஏதோ மனக்குறை உள்ளது என்று அர்த்தம். அதனை சரி செய்ய முயல வேண்டும் என்கிறார்கள் ஜெர்மன் மனநோய் ஆராய்ச்சியாளர்கள்.
வயதானவர்களுக்கு ஞாபக மறதி நோய் ஏற்படுவது வைட்டமின் டி பற்றாக்குறையால்தான் என்கிறார்கள் சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள். எனவே, இவர்கள் வைட்டமின் டி நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள்.
குறைவாக சாப்பிடுவது முதுமையை மெதுவாக்கிறது. குறைந்த கலோரிகள் கொண்ட உணவு வகைகள் முதுமையை வேகம் குறைக்க உதவலாம் என்கிறார்கள் அமெரிக்காவின் ஹாம்பிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். வயதாவதை தள்ளிப்போடும் ஆற்றல் வைட்டமின் பி வகைகளுக்கு உண்டு. வைட்டமின் பி 3 சத்துள்ள உணவுகள் வயதாவதைத் தள்ளிப்போடுவதுடன், வயதான காலத்தில் வரும் நோய்களையும் தவிர்க்கிறது என்கிறார்கள்.
வயதானவர்கள் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்காமல் கொஞ்சம் உடலியக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வர வேண்டும். தன்னால் முடிந்த வேலைகளைச் செய்ய வேண்டும். 60 வயதிற்கு மேல் சுறுசுறுப்பாக இயங்கும் முதியவர்கள் கேன்சர், இதய நோய்கள் மற்றும் மன அழுத்தம் சார்ந்த நோய்களிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 51 சதவீதம் பேர் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும் போது தவறி விழுந்து விடுகிறார்கள். அதுவே அவர்களின் மரணத்திற்கு காரணமாகிறது என்கிறார்கள் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். எனவே, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதை தவிர்க்க வேண்டும். அதோடு, சட்டென்று திரும்பக் கூடாது என்கிறார்கள்.
வயதான காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு விடும் என்பதைத் தவிர்க்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக்கொள்ள சொல்வார்கள். ஆனால், அது எலும்பு முறிவுகளை தடுப்பதில்லை என்கிறார்கள் சீனாவின் தான்சென் மருத்துவ ஆய்வாளர்கள். இதற்கு பதிலாக கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளையும், தினமும் கொஞ்ச நேரம் காலை நேரத்தில் சூரிய ஒளியில் இருப்பதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.