ரயில் பயணத்தில் ஆர்.ஏ.சி. (RAC) பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

Things to know about RAC
Things to know about RAC
Published on

விடுமுறை நாட்களில் அவ்வளவு எளிதில் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட்டுகள் கிடைக்காது. ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யச் செல்லும்பொழுது உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைக்காமல் ஆர்.ஏ.சி. (Reservation Against Cancellation) எனப்படும் ரத்து செய்யப்பட்ட முன்பதிவுக்கு எதிரான ஒதுக்கீட்டில் நமக்கு இருக்கை கிடைப்பதுண்டு. ஆர்.ஏ.சி. என்பது ரத்து செய்யப்பட்ட முன்பதிவுக்கு எதிரான ஒதுக்கீடாகும். ஆர்.ஏ.சி. இருக்கை இரண்டு பயணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த வகை பயண சீட்டு உள்ளவர்கள் ரயிலில் ஏறி அமர உரிமை உண்டு.

ஒரு பெட்டியில் 12 முதல் 14 ஆர்.ஏ.சி. பயணிகள் வரை பயணிக்க முடியும். மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியிலும், சாதாரண படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டியிலும் இந்த எண்ணிக்கை மாறுபடலாம். பெட்டியின் இருக்கைகளைப் பொறுத்து ஆறு அல்லது ஏழு இருக்கைகள் ஆர்.ஏ.சி.க்காக ஒதுக்கப்படுகின்றன.

ரயில்வேயில் ஏழு வகையான காத்திருப்பு டிக்கெட்டுகள் உள்ளன. இதில் RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால். முழு பெர்த் வழங்கப்படுவதில்லை. இன்னொருவருடன் தனது இருக்கையை பகிர்ந்து கொண்டு ஒரு பெர்த்தில் அமரலாம்.

இதையும் படியுங்கள்:
நுரையீரல் சளியை தவிர்க்க சாப்பிடவேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!
Things to know about RAC

யாரேனும் தங்களுடைய முன்பதிவை ரத்து செய்தால் ஆர்.ஏ.சி. இருக்கை பட்டியலில் முதலில் உள்ள பயணிக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கையாக அது கிடைக்கும். மீதமுள்ள இரண்டாவது பயணி முழு ஆர்.ஏ.சி. இருக்கையையும் உபயோகித்துக் கொள்ளலாம். அதுவரை பக்கவாட்டு கீழ் இருக்கையில் ஒரு பகுதியில் பயணிக்கலாம். ஆர்.ஏ.சி. இருக்கை இரண்டு பயணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

இது பொதுவாக பக்கவாட்டு கீழ் இருக்கையில் இரண்டு பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் கிடைக்கும். பக்கவாட்டு மேல் இருக்கையில் உறுதி செய்யப்பட்ட இருக்கை பெற்ற பயணி கீழ் இருக்கையில் வந்து அமர முயற்சித்தால் நாம் அவரைத் தடுக்கும் உரிமை உண்டு. காரணம், ஏற்கெனவே ஆர்.ஏ.சி. முறையில் இருக்கை இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இதில் மூன்றாவதாக அவரும் வந்து அமர முயற்சித்தால் அவரைத் தடுக்கும் உரிமை நமக்குண்டு.

ஆர்.ஏ.சி. இருக்கை என்பது இரண்டு பயணிகளுக்காக ஒதுக்கப்படுவதால் பகல் நேரத்தில் இருவரும் அமர்ந்து பயணிக்கலாம். இரவு நேரத்திலோ இருவருமே தங்கள் கால்களை நீட்டிக்கொண்டு உறங்கலாம். பக்கவாட்டு மேல் இருக்கையில் கன்ஃபார்ம் டிக்கெட்டில் வரும் பயணி பகலில் இருக்கையில் வந்து அமரலாம். ஆனால், இரவு உறங்கும் நேரம் வந்ததும் அவர் தன்னுடைய மேல் இருக்கைக்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் அவரை எழுப்பும் உரிமை ஆர்.ஏ.சி.யில் பயணிக்கும் நபருக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
தலையணை இல்லாத தூக்கத்தால் கிடைக்கும் 5 பலன்கள்!
Things to know about RAC

ரயில்வே விதிமுறைகளின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஆர்.ஏ.சி. இருக்கையின் மேல் இருக்கையில் இருப்பவர் உட்கார அனுமதி இல்லை. அதனை மறுத்து அவர் கீழ் இருக்கையில் அமர விரும்பினால் நாம் சிறிதும் தயக்கமின்றி டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளிக்கலாம்.

ஏசி பெட்டிகளில் குளிரைத் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்பட்டு வந்தாலும், ஆர்.ஏ.சி. எனப்படும் அமர்ந்து செல்லும் இருக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கும் பயணிகளுக்கு முன்பு போர்வை வழங்கப்பட்டதில்லை. இதனால் அமர்ந்து செல்லும் பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு தற்பொழுது அவர்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com