இது மின்னணு ஆட்சி காலம்! எச்சரிக்கை தேவை!

Parents and Children in the Digital World
Parents and Children in the Digital World

- மரிய சாரா 

இன்றைய காலகட்டத்தில் மின்னணு உலகம், நம் வாழ்வோடு ஒட்டிய ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. குறிப்பாக, குழந்தைகள் இப்பொழுது மின்னணு சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு அறிவுத்திரணை விரிவாக்கவும், படிப்பில் உதவவும், விளையாட்டுகளில் ஈடுபடவும் மின்னணு சாதனங்கள் பயன்படுகின்றன. எனினும், இவற்றில் இருந்து எழும் ஆபாத்துக்களைப் பற்றிய அச்சங்களும் இருக்கின்றன. இதில், குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகிறது. இங்கு, மின்னணு உலகில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சில முக்கியமான ஆலோசனைகளைப் பார்ப்போம்.

கண்காணிப்பு:
இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக குழந்தைகள் மின்னணு சாதனங்களை எப்போது, எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பதில் விழிப்புணர்வு வேண்டும். கூடுதலாக, பெற்றோர்கள் குழந்தைகளின் இணைய உலாவல் பழக்கவழக்கங்களை ஆய்வு செய்வது முக்கியம். இதற்காக பல்வேறு மென்பொருட்கள் மற்றும் செயலிகள் உள்ளன. இவை, குழந்தைகள் பயன்படுத்தும் இணைய தளங்கள், செயலிகள் பற்றிய விவரங்களை பெற்றோர்களுக்கு வழங்கும்.

இணைய பயன்பாடு:
குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் முறையை அறிய வேண்டும். அவர்களுக்கு இணையத்தின் நன்மைகள் மட்டுமின்றி, தீமைகளையும் எடுத்துரைப்பது அவசியம். இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை உணர்த்த வேண்டும்.

இணைய பாதுகாப்பு:
ஆபாச இணைய தளங்கள் குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிக்கும். பெற்றோர்கள் தங்களின் சாதனங்களில் பாதுகாப்பான இணைய தளங்களை மட்டுமே அணுகக்கூடியதாய் மாற்றி அமைக்க வேண்டும். குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் போது, அவர்கள் பயணிக்கும் தளங்கள் பாதுகாப்பானவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் ஈடுபாடு:
இன்றைய குழந்தைகள் சமூக ஊடகங்களில் பெரிதும் ஈடுபடுகின்றனர். சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளின் படிப்பு மற்றும் உடற்பயிற்சியை பாதிக்கும். மேலும், சமூக ஊடகங்களில் சிலர் தவறான நோக்கங்களுடன் இருக்கக்கூடும். எனவே, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் என்ன என்ன வகையில் எதற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும்.

யாருடன் தொடர்பு:
மின்னணு சாதனங்களில் குழந்தைகள் ஆபத்தான நபர்களின் தொடர்புகளை பெறக்கூடும். இதனை தவிர்க்க, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தனிப்பட்ட சந்திப்புகள், ஆபாச செய்திகள் மற்றும் தவறான அறிவுரைகளை தவிர்க்க, குழந்தைகளுக்கு நல்வழிகளை சொல்ல வேண்டும்.

நேர நியமனம்:
மின்னணு சாதனங்களை பயன்படுத்தும் நேரத்தை குழந்தைகளுக்கு முறையாக ஒதுக்கீடு செய்தல் முக்கியம். குழந்தைகள் நாளொன்றுக்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே மின்னணு சாதனங்களுக்கு ஒதுக்க வேண்டும். அதன் பின் அவர்கள் படிப்பு, விளையாட்டு ஆகிவற்றில் கவனம் செலுத்தவைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சலிப்பூட்டும் வாழ்க்கையை சாதிக்க வைக்கும் வாழ்வாக மாற்றும் ரகசியம்!
Parents and Children in the Digital World

செயலிகளின் தேர்வு:
மின்னணு உலகம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக, பல செயலிகள் மற்றும் மென்பொருட்கள் உள்ளன. இதனை பெற்றோர்கள் அவசியமாக பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பான வலை உலாவல், பாதுகாப்பான விளையாட்டுகள், மற்றும் கல்வி சார்ந்த செயலிகள் குழந்தைகளுக்கு மிகுந்த பயன் அளிக்கும்.

வலைப்பதிவுகள் தேர்வு:
இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகள் உள்ளன. பெற்றோர்கள் அவற்றை படித்து, அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய உலகத்தை உருவாக்க வழிகாட்டல் பெறலாம்.

உரையாடல் மற்றும் அறிவுறுத்தல்:
பெரும்பாலான நேரங்களில், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள், சந்தேகங்கள், மற்றும் புறக்கணிக்கப்படும் நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள நல்ல நம்பிக்கையை வளர்க்க முடியும்.

இவ்வாறு, மின்னணு உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்ப உலகில், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். குழந்தைகளின் நலனை முன்னிட்டு, பெற்றோர்கள் சில எளிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com