அதிர்ஷ்டம் என்பது இதுதான்: வாழ்க்கையை செதுக்கும் 5 உறவுகள்!

Relationships that shape life
Relations
Published on

றைவன் ஒருவன், அவன் என்றும் நல்வழி தருவான். ஆம், அது மிகச்சிறந்த உண்மைதான். ஆனாலும், அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதில்லை. சமயத்தில் கிடைத்தாலும், அவை நிலைப்பதில்லை. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்யும் குணம் நம்மிடையே, சீரான ரத்த அழுத்தம் போல இருப்பது நல்லது. அப்படி ஒருவன் இறையருளோடு நிம்மதியாக வாழ அவனுக்கு தாய், தந்தை, மனைவி, சகோதரன், அவனது பிள்ளைகள் என இவை ஐந்தும் நல்ல வகையில் அமைய வேண்டும். பஞ்சபூதங்கள் போல!

‘தாய்’ என்பவள், பாசம், நேசம், பற்றுதல் கொண்டவளாக அமைய வேண்டும். அவளே குடும்பத்தை நல்ல வழியில் கொண்டு செல்பவள். அதை விடுத்து, அவள் ஊதாாித்தனமாக, அளவுக்கு மீறிய ஆணவத்துடன், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலை வந்தால் அந்த நிலைப்பாடானது நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சிரமம்தான்.

இதையும் படியுங்கள்:
அட! குப்பையில ஈ மொய்க்குதா? இந்த ஒரு பொருள் போதும்! இனி ஈக்களே வராது!
Relationships that shape life

‘தந்தை’ என்பவர் நல்ல நெறிமுறைகளுடன், நல்ல பண்பாடு கடைபிடித்து, சத்தியம் தவறாமல், மது, மாது பழக்கமில்லாமல் இருக்க வேண்டும். உழைக்காமல் திாிவது போன்ற செயல்பாடு உள்ளவராக இருந்தால் வாழ்வில் முன்னேறவே முடியாது.

‘மனைவி’ அவள் நமது தலைமுறையை தழைக்க வைக்க வந்தவள். குடும்பம் தழைக்க, அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவளாக, நமது குடும்பம் என்ற ஐக்கிய உணர்வோடு, நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடித்து, மாமனாா், மாமியாா், கணவன் மற்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கட்டுக்கோப்பு மிகுந்தவளாக குடும்பத்தை வைத்திருப்பதே உசிதம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் எதிர்காலத்தையே மாற்றிவிடும் பெற்றோர்களின் ஒரு வார்த்தை!
Relationships that shape life

‘சகோதரன்’ அமைவது மிகவும் சிரமம். பங்காளி காய்ச்சல் இருப்பது நல்லதல்ல. உடன் பிறந்த சகோதரனுக்கு எந்த வகையிலும் துரோகம் செய்யாதவனாக அமைய வேண்டும். இராமாயணத்தில் சகோதரன் பரதன் போல உயர்ந்த  குணநலன்கள் கொண்டவனாக அமைய வேண்டும். கூடப் பிறந்தவனுக்கு நல்லதே செய்ய வேண்டும். அவனே சிறந்த சகோதரன் ஆவான்.

‘பெற்ற பிள்ளைகள்’ நல்ல பண்புடன் வளர வேண்டும். பொியவர்களை மதிப்பதுடன், தாய் சொல்லை தட்டாத தனயன் போலவும், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற நிலைப்பாடுகளோடு, உத்தமமான பிள்ளைகளாக வளர்ந்து குடும்ப கெளரவத்தைக் காக்க வேண்டும்.

இவை அனைத்தும் ஒருவர் வாழ்வில் சரிவர அமைவதே சிறப்பு. இதுவே இறைவன் தந்த தீா்ப்பு! இந்த ஐந்தும் சிறப்பாக அமைந்தாலே அவன் பாக்கியசாலி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com