குழந்தைகளின் எதிர்காலத்தையே மாற்றிவிடும் பெற்றோர்களின் ஒரு வார்த்தை!

Parents' words that change children's futures
Child with Father
Published on

குழந்தைப் பருவத்தில் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்த சொற்கள்தான், வளர்ந்த பிறகு அவர்களின் இக்கட்டான நேரங்களில் பயன்பட்டிருக்கிறது. இதுபோன்ற பெற்றோர்களின் போதனைகளைக் கேட்டு சாகசம் படைத்த சிலரது வாழ்க்கை நிகழ்வுகளை இப்பதிவில் காண்போம்.

நியூயார்க்கின் இரட்டை கோபுரமான உலக வர்த்தக மையம் (World Trade centre) 9.11.2001 அன்று விமானம் மோதி எரிந்து நாசமானபோது, பலரது உயிரை பலியாக்கியது. அந்த நகரின் மாநகர சபை முதல்வராக இருந்தவர் ரூடி குளியானி என்பவர். அவர் அந்நகரை கட்டி எழுப்ப வெற்றிகரமாக முயன்று கொண்டிருந்தார். நெருக்கடிக்கு மத்தியில் சுறுசுறுப்பாக கடமை ஆற்றிய இவரது சேவையைப் பாராட்டி எலிசபெத்து மகாராணி இவருக்கு ‘SIR’ பட்டம் வழங்கி கௌரவித்தார்.

இதையும் படியுங்கள்:
வால் பேப்பர்கள் வெறும் அழகுக்காக மட்டுமல்ல; மனப்புத்துணர்ச்சிக்கும்தான்!
Parents' words that change children's futures

இவருக்கு பத்து வயதாக இருக்கும்போது இவரது தந்தை இவருக்கு ஒரு முறை கூறியது இன்றும் அவருக்கு ஞாபகம் இருப்பதாகக் கூறுகிறார். ‘தடைகள், நெருக்கடிகள், சிக்கல்கள் ஏற்படும்போது அமைதி, மேலும் அமைதி, மேலும் மேலும் அமைதியாக இருந்தால்தான் முடிவெடுக்கலாம், செயல்படலாம், வேலை செய்யலாம் என்று கூறியதுதான் இன்று தனக்கு வெற்றியைத் தருகின்றது’ என்று கூறினார்.

நியூயார்க் நகரின் முன்னாள் போலீஸ் ஜான் பெர்ரி கூறும்போது, ‘ஆபத்துகளில் உதவுதல் என்பது எனது சிறு பிராயத்தில் பதிந்த எண்ணம்’ என்கிறார். 9.11.2001ல் வேலையிலிருந்து ஓய்வு பெற தனது badgeயும் இளைப்பாறும் பத்திரங்களையும் (Retirement papers ) கொடுத்தார். அப்போது உலக வர்த்தக மையத்தை விமானம் தாக்கி எரிகிறது என்ற செய்தி போலீசுக்கு வர அந்த செய்தியைக் கேட்டதும், தான் அளித்த ஓய்வு பத்திரங்களை மீளப் பெற்று கிழித்து எறிந்து விட்டு, பேட்ஜையும், போலீஸ் உடையையும் திரும்ப வாங்கி அணிந்து கொண்டு ஓடி பலரை காப்பாற்றி இருக்கிறார். இறுதியில் அவர் இடிபாடுகளில் சிக்குண்டு இறந்துவிட்டார். இவர் சிறு பிராயத்தில் இருந்தபோது ஒரு சமயம் இவரது பெற்றோர் கூறினராம், "பிறருக்கு ஆபத்து ஏற்படும்போது கைகட்டிக் கொண்டு நிற்காதே, உன்னால் முடிந்த உதவியைச் செய்’ என்று.

இதையும் படியுங்கள்:
கடைசி பெஞ்சுக்கு விடை கொடுங்கள்: வட்ட மேசைகள் கொண்டு வரும் அற்புத மாற்றங்கள்!
Parents' words that change children's futures

மாவீரன் நெப்போலியனுக்கு சிறு பிராயத்தில் பூனை ஒன்று பாயும்போது பயம் வந்து விட்டதாம். அதன் பிறகு நெப்போலியனுக்கு வளர வளர அந்தப் பூனையை பார்த்தாலே ஒரு அலர்ஜி வந்துவிடுமாம். இதை கவனித்த எதிரிநாட்டு போர் வீரர்கள்  உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்தபோது, ரகசியமாக வைத்திருந்த பூனைகளை நெப்போலியனை நோக்கி வீசி தோற்கடித்தனர். இதனால் அவன் கைதியானான். நெப்போலியனின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வே, மாவீரன் நெப்போலியனது சக்கரவர்த்தி முடியை கீழே இறக்குவதற்கு ஒரு காரணம் ஆகிவிட்டது.

மேலே குறிப்பிட்டவற்றிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் இதுதான், ஒருவரது செயல்களுக்கு உயர்வு, தாழ்வு, தயக்கம், தன்னம்பிக்கை, அனைத்திற்கும் அவர்களது குழந்தை பருவத்தில் நடந்த நிகழ்வுகளே முக்கியக் காரணமாகிறது. அதிலும் பெற்றோர்கள் கூறிய வார்த்தைகளே அவர்களுக்கு அந்த நேரத்தில் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்து விட்டிருக்கிறது.

காரணம், குழந்தைப் பருவ அனுபவங்களே ஒருவித விசாரணையும் இல்லாமல் நேரடியாக அவர்களது ஆழ்மனதை சென்று அடைந்து விடுகிறது. அவ்வப்போது அது தலை காட்டுகின்றது. குழந்தைப் பருவமே ஒருவனது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. ஆதலால் குழந்தைகளிடம் எதையும் பேசும்பொழுது பாசிட்டிவான விஷயங்களைப் பேசுவதுதான் உயர்வானது. பயம் காட்டக் கூடாது. அவர்கள் பயப்படும்படியான எந்த விஷயத்தையும் அவர்களுக்கு போதிக்காமல் இருப்பதே உத்தமம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com