வெங்காயம் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சில டிப்ஸ்! 

Tips to Prevent onion from decay.
Tips to Prevent onion from decay.

இந்திய உணவுகளில் வெங்காயத்தின் பங்களிப்பு மிக மிக அதிகம். எந்த உணவு செய்ய வேண்டும் என்றாலும் அதில் வெங்காயம் இல்லாமல் இருக்காது. உணவின் சுவையைக் கூட்ட வெங்காயம் அத்தியாவசிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. 

எப்படி நாம் மற்ற காய்கறிகளை வாங்குகிறோமோ அப்படித்தான் வெங்காயத்தை தரமாக வாங்குகிறோம். 

ஆனால் அந்த வெங்காயம் விரைவில் கெட்டுப்போனால் மனம் கஷ்டப்படுகிறது அல்லவா?. இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். இந்தப் பதிவில் வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் தந்திரங்களை உங்களிடம் சொல்லப் போகிறேன். இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.

  1. வெங்காயம் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு முதலில் அதை வாங்கும்போதே ஈரப்பதம் இல்லாமல் வாங்குவது அவசியம். வெங்காயத்தில் ஈரப்பதமோ அல்லது கரும்புள்ளிகளோ இருந்தால் அதை வாங்குவதைத் தவிர்க்கவும். 

  2. பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு என்னவென்றால், வெங்காயத்தை வாங்கியதும் கொண்டு போய் பிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. பிரிட்ஜில் வைப்பதால், ஈரப்பதம் வெங்காயத்தை விரைவில் கெட்டுப்போகச் செய்துவிடும். 

  3. அடுத்ததாக வெங்காயத்தை சூரிய ஒளி படாமல் காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைக்கும்போது வெங்காயம் நீண்ட காலத்திற்கு கெடாமல் இருக்கும்.

  4. வெங்காயத்தை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்கக் கூடாது. குறிப்பாக உருளைக்கிழங்குடன் சேர்த்து வைத்தால் வெங்காயம் சீக்கிரம் கெட்டுப் போகும். 

  5. வெங்காயத்தை பிளாஸ்டிக் பைகளில் போட்டு இறுக்கமாக மூடி வைக்காமல், ஏதேனும் கூடைகளிலோ அல்லது பெட்டிகளிலோ காற்று புகும்படி வைப்பது நல்லது. நல்ல காற்றோட்டம், வெங்காயம் விரைவாக கெட்டுப் போவதிலிருந்து தடுக்கும். 

  6. வெங்காயத்தில் ஈரம் பட்டுவிட்டால் அதன் மீது கருப்பு நிறத்தில் புஞ்சை ஏற்பட வாய்ப்புள்ளது. புஞ்சை ஏற்பட்ட வெங்காயம் விரைவில் கெட்டுப் போகும். அதேசமயம் அந்த வெங்காயத்தை நாம் உணவில் பயன்படுத்துவதும் தவறு. 

  7. சில சமயங்களில் வெங்காயத்தை சமையலுக்குப் பயன்படுத்தும்போது, அதிகமாக நறுக்கி விடுவோம். அப்படி நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் மறுநாள் வரை கெட்டுப் போகாமல் வைக்க வேண்டுமெனில், பிளாஸ்டிக் பையில் போட்டு காற்று புகாதபடி பிரிட்ஜில் வைக்கலாம். 

  8. இறுதியாக வெங்காயத்தில் துர்நாற்றம் வந்தாலோ அல்லது கருப்பு நிறத்தில் புஞ்சை தென்பட்டாலோ அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது வெங்காயம் கெட்டுப் போனதற்கான அறிகுறியாகும். இதன் மூலமாக உடல் நலக்கேடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
மறக்க முடியாத பயணம் அனுபவம் வேண்டுமா? அப்படியானால் 'பெரு' நாட்டிற்கு செல்லுங்கள்!
Tips to Prevent onion from decay.

எனவே வெங்காயத்தை வாங்கும் போதே நல்ல வெங்காயமாக பார்த்து வாங்கி, ஈரப்பதம் அதிகம் இல்லாத இடத்தில், நல்ல காற்றோட்டத்தில் வைத்தால் வெங்காயம் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com