அதிகமா ஜங்க் ஃபுட் சாப்பிடும் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சில டிப்ஸ்! 

Tips to control children who eat too much junk food!
Tips to control children who eat too much junk food!

இன்றைய காலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளுக்கு வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு பெற்றோராக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நோக்கி உங்கள் பிள்ளைகளை வழி நடத்துவது சவாலாக இருந்தாலும், சரியான யுத்திகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகள் அடிக்கடி ஜங்க் ஃபுட்ஸ் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த முடியும். 

  1. முன்மாதிரியாக இருங்கள்: பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைபிடிப்பதில் நீங்கள் முதலில் சரியாக இருங்கள். பழங்கள் காய்கறிகளுக்கு பதிலாக அதிகம் சர்க்கரை நிறைந்த அல்லது எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட்ஸ் நீங்கள் சாப்பிடுவதை உங்கள் பிள்ளைகள் பார்க்கும்போது, அவர்களும் அதைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

  2. ஆரோக்கியமான உணவுகளை வாங்கி வையுங்கள்: பழங்கள், காய்கறிகள், தயிர், பருப்புகள் மற்றும் முழு தானிய தின்பண்டங்களை வாங்கி ஃப்ரிட்ஜில் வையுங்கள். இவை உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது கிடைப்பது மூலமாக, அவர்கள் இத்தகைய ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட எளிதாக இருக்கும்.

  3. உணவு சார்ந்த விஷயங்களில் உங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள்: அதாவது எதுபோன்ற உணவு சாப்பிடலாம் என உங்கள் குழந்தைகளை தேர்வு செய்ய வையுங்கள். அதில் பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கிய உணவுகளை தேர்வு செய்ய ஊக்கப்படுத்துங்கள். 

  4. ஜங்க் ஃபுட்ஸ் மீது கட்டுப்பாடுகள் விதியுங்கள்: எப்போதாவது ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவது பரவாயில்லை என்றாலும், உங்கள் பிள்ளை அதை அடிக்கடி சாப்பிடாமல் இருக்க வரம்புகளை அமைக்கவும். இத்தகைய கட்டுப்பாடுகள் விதிப்பது மூலமாக, ஆரோக்கிய உணவின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள உதவும்.

  5. ஆரோக்கியமான உணவை அவர்களுக்கு பிடித்தது போல சமைத்துக் கொடுங்கள்: சில குழந்தைகள் உணவு ருசியாக இல்லை என்பதற்காகவே சாப்பிட மாட்டார்கள். எனவே முற்றிலும் வித்தியாசமாக ஆரோக்கிய உணவுகளை சமைத்துக் கொடுப்பது மூலமாக, அவர்களுக்கு ஜங்க் ஃபுட்ஸ் மீதான ஆர்வத்தைக் குறைக்கலாம். அல்லது அவர்களையே சமையலில் ஈடுபடுத்தி, விருப்பமான உணவுகளை செய்துகொள்ள ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். 

  6. ஊட்டச்சத்துக்கள் பற்றி கற்பிக்கவும்: சத்தான உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஜங் ஃபுட் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். எப்போதாவது சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். 

  7. உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும்: உங்கள் பிள்ளையை வெளியே சென்று ஓடி ஆடி விளையாடும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது மூலமாக, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அவர்களுக்கு ஊக்குவிக்கலாம். உடற்பயிற்சி, அதிகப்படியான ஆற்றலை எரிக்க உதவுவது மட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளல் மற்றும் ஆற்றல் இழப்புக்கு இடையே உள்ள சமநிலையைப் புரிந்துகொள்ள உதவுகிறது.  

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் முகப்பருவை தடுக்க 10 டிப்ஸ்! 
Tips to control children who eat too much junk food!

ஒரு பெற்றோராக இத்தகைய விஷயங்களை செயல்படுத்துவதன் மூலம், உங்கள் பிள்ளைகள் ஜங்க் ஃபுட்ஸ் மீதான கட்டுப்பாட்டை பெற்று அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும். மேற்கூறிய விஷயங்களை நீங்கள் செயல்படுத்தும்போது பொறுமை மற்றும் தொடர்முயற்சி முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com