உங்க பைக் மைலேஜ் குறைவா தருதா? அப்போ இந்த 6 டிப்ஸ் உங்களுக்குதான்!

Tips to increase the milage of bike.
Tips to increase the milage of bike.

இப்போதெல்லாம் அனைவரது வீடுகளிலும் பைக் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் எவ்வளவு தூரம் என்றாலும் நடந்து சென்ற நாம், இப்போது பைக் இல்லாமல் அடுத்த தெருவுக்குக் கூட செல்வதில்லை. அந்த அளவுக்கு பைக்கின் பயன்பாடு நம்மிடம் அதிகரித்துவிட்டது. அதனால் பைக் ஓட்டுபவர்களுக்கு அது கொடுக்கும் மைலேஜ் மிக முக்கியமானதாகும். 

புதிதாக ஒரு பைக் வாங்கும் போது கிடைக்கும் மைலேஜ், இரண்டு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடுகிறது. இதற்குக் காரணம் வாகனத்தை நாம் முறையாக பராமரிக்காததே. சரி வாருங்கள் இந்தப் பதிவில் மைலேஜை எப்போதும் சீராக வைத்திருக்க செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம். 

1. இருசக்கர வாகனம் வைத்திருக்கும் அனைவருமே அதை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பைக்கை சர்வீஸ் விடுங்கள். சிலர் பைக் நன்றாக தானே இருக்கிறது, ஏன் சர்வீஸ் விட வேண்டும்? என நினைப்பார்கள். ஆனால் சர்வீஸ் விட்டு வாகனத்தைப் பிரித்து பார்த்தால் மட்டுமே அதில் இருக்கும் பிரச்சனையை நாம் கண்டுபிடிக்க முடியும். எனவே நல்ல மைலேஜ்க்கு பைக் சர்வீஸ் மிக முக்கியம்.

2. அதேபோல வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்க எஞ்சின் ஆயிலை மாற்ற வேண்டியது அவசியம். உங்களுக்கு சர்வீஸ் விடுவதற்கு சோம்பேறித்தனமாக இருந்தால், குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ஜின் ஆயிலை மாற்றிவிடுங்கள். எஞ்சின் ஆயில் சரியாக இருந்தால்தான் எஞ்சின் மென்மையாக இயங்க உதவும். இதன் மூலமாக வாகனத்திற்கு நல்ல மைலேஜ் கிடைக்கும்.

3. வாகனத்தை இயக்கும்போது எக்கனாமி ரேஞ்ச் வேகத்தில் இயக்க கற்றுக் கொள்ளுங்கள். வேகமாக செல்கிறது என்பதற்காக அதிவேகத்தில் வாகனத்தை இயக்கினால் விரைவாக எரிபொருளைக் குடித்துவிடும். எனவே வாகனத்தை சீராக 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிவந்தாலே மைலேஜ் சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனை எப்படி இருக்கும் தெரியுமா?
Tips to increase the milage of bike.

4. அதேபோல வாகனத்தை இயக்கும்போது கியரை மாற்றுவதில் கவனமாக இருங்கள். வாகனத்தை எடுத்த உடனேயே நான்கு, ஐந்து என கியரை மாற்றி வேகத்தை கூட்ட நினைத்தால், மைலேஜ் அடிவாங்கும். மேலும் இப்படி செய்வதால் கிளட்ச் பிளேட் சேதமடைந்து, எரிபொருள் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டுங்கள். அடிக்கடி கியரை மாற்றுவதைத் தவிர்க்கவும்.

5. நீங்கள் ஏதாவது டிராபிக் நிறைந்த பகுதியில் வாகனத்தை இயக்குகிறீர்கள் என்றால், டிராபிக் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும் இடத்தில் இன்ஜினை ஆப் செய்வது நல்லது. இப்படி செய்யும்போது வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும். 

உங்கள் வாகனத்தை நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தினாலும் மைலேஜ் குறையும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் வாகனத்தை வெயிலில் நிறுத்தும்போது எரிபொருள் விரைவாக ஆவியாகிவிடும். இது எரிபொருள் செயல் திறனைக் குறைத்து, மைலேஜ் பாதிக்கச் செய்துவிடும். எனவே வாகனத்தை எப்போதும் நிழலில் நிறுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com