
பாத்ரூம் டைல்ஸ், குழாய்களில் அதிகமாக ஏற்படும் உப்பு கறை படிந்து நாளடைவில் மஞ்சள் கறையாக மாறிவிடும். இதை எளிதான முறையில் சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்கள்.
சலித்த கோலமாவில், சோப்பு பவுடர், சமையல் சோடா, சேர்த்து கலந்து பாத்ரூம் தரை மீது தூவி தண்ணீரை தெளித்து பத்து நிமிடம் ஊறவைத்து அதன் பின் துடைப்பத்தால் தேய்த்து கழுவிவிட்டால் கறைகள், அழுக்குகள், பாக்டீரியாக்கள் அனைத்தும் சுத்தமாகும்.
தண்ணீர் குழாயில், பைப்புகளிலும் இந்த பவுடருடன், எலுமிச்சை சாறு. அல்லது வினிகர் சேர்த்து ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து பத்து நிமிடம் கழித்து ஊறிய பின் தேய்த்து சுத்தமாக கழுவினால் உப்பு கறைகள், மஞ்சள் கறைகள், அழுக்குகள் நீங்கி பளிச்சிடும்.
பக்கெட், மக்குகள் போன்றவற்றிலும் இந்த கலவையுடன் வினிகர் சேர்த்து தடவி பத்து நிமிடம் கழித்து தேய்த்து கழுவினால் பாசி படிந்த கறைகள் அனைத்தும் சுத்தமாகும்.
பாத்ரூம் கழுவும் சிங்க் பகுதிகளிலும் இக்கலவையை இதை மாதிரிதடவி ஊறவைத்து தேய்த்துக் கழுவி வந்தால் விடிப்பிடியான கறைகள் நீங்கும்.
பாத்ரூமில் உள்ள ஸ்டூலை அடிப்பக்கத்தில் உள்ள அழுக்குகள், இடுக்குகளில் உள்ளவற்றை நீக்க ஸ்டூலை ஒரு பக்கெட் நீரில் சோப்பு பவுடரை கலந்து, அதில் ஆப்பசோடா மாவு, வினிகர் சேர்த்து கலந்து ஸ்டூலை கவிழ்த்து கவிழ்த்து போட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும் பின்புரப்பர் வைத்து தேய்த்து எடுத்தால் ஸ்கூல் பளிச்சென்று மாறிவிடும்.
இடுக்குகளில் உள்ள அடுக்குகளை நீக்க பல் துலக்கும் பழைய பிரஷ் பெயிண்ட் அடிக்கும் பழைய பிரஷ் ஏதாவது இருந்தால் அதனைக் கொண்டு இடுக்குகளில் உள்ள அழுக்குகளை தேய்த்து எடுத்தால் சுலபமாக நீங்கும். பின் வெயிலில் காயவைத்து எடுத்தால் பளிச் என புதுசாக ஜொலிக்கும்.