மழைக்காலத்தில் Fridge-ஐ முறையாக பராமரிக்க சில டிப்ஸ்! 

Tips to Properly Maintain Fridge in Rainy Season!
Tips to Properly Maintain Fridge in Rainy Season!
Published on

மழைக்காலம் வந்துவிட்டது! இது ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காலம். எனவே உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் ஈரப்பதத்தால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் உங்கள் குளிர்சாதனப் பெட்டி சரியாக வேலை செய்யாமல் போகலாம். அதேநேரம் மழைக்காலங்களில் குளிர்சாதனப் பெட்டியின் தேவை குறைவாகவே இருக்கும் என்பதால், அதை முறையாக பராமரித்து எப்படி பாதுகாப்புடன் வைத்திருப்பது என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

மழைக்காலத்தில் குளிர்சாதனப் பெட்டியை பராமரிக்கும் வழிகள்: 

உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் வெளிப்புறத்தில் ஈரப்பதமாக இருந்தால், வறண்ட துணியைப் பயன்படுத்தி நன்றாகத் துடைக்கவும். ஈரத்துணியை, பயன்படுத்த வேண்டாம் ஏனெனில் இது மின்சாரத்தை கடத்தும் என்பதால், ஆபத்துக்கள் அதிகம். 

காற்றோட்டம் தடைபடாமல் இருக்க, குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் மற்றும் பக்கங்களில் போதுமான இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், பிரிட்ஜின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க, ஒரு ஸ்டாண்டின் மேல் அதை வைப்பது அவசியம். 

வாரத்திற்கு ஒருமுறையாவது குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து, ஃப்ரிட்ஜை சுத்தமாக துடைக்கவும். அதிக வாசனை வெளியேறும் உணவுகளை பிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்கவும். கெட்டுப்போன உணவுகளை உடனடியாக ஃப்ரிட்ஜில் இருந்து அகற்றுவது நல்லது. 

உங்கள் ஃபிரிட்ஜின் கன்டென்சர் காயிலை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை கன்டென்சர் காயில் தூசியால் அடைபட்டால், குளிர்சாதனப் பெட்டி சரியாக வேலை செய்யாமல் போவதுடன், அதிக மின்சாரத்தை செலவழித்து மின்கட்டணத்தை உயர்த்தும் வாய்ப்புள்ளது. கன்டென்சர் காயிலை சுத்தம் செய்ய மின்சாரத்தைத் துண்டித்து, ஒரு மென்மையான துணியைப் பயன்படுத்தி பாதுகாப்பாக சுத்தம் செய்யவும். 

அதேபோல கன்டெடன்சர் ஃபேனையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். கன்டென்சர் ஃபேன் சரியாக வேலை செய்யவில்லை எனில், கன்டென்சர் காயில் சூடாகி குளிர்சாதனப் பெட்டி சேதமடையக்கூடும். எனவே, அது சரியாக வேலை செய்கிறதா என்பதை சரி பார்த்து, சரியாக வேலை செய்யவில்லை எனில் ஒரு ஏசி மெக்கானிக்கை அழைத்து உடனடியாக சரி செய்யவும். 

ஃப்ரீசரில் ஐஸ் கட்டி அதிகமாக சேர்ந்திருந்தால் Defrost செய்து அதை அகற்றுவது நல்லது. பெரும்பாலான பிரிட்ஜ்களில் Defrost பட்டன் இருக்கும். அதைப் பயன்படுத்தி ஐஸ் கட்டிகளை நீக்கலாம். அல்லது சிறிது நேரம் பிரிட்ஜில் மின்சாரத்தைத் துண்டிப்பது மூலமாகவும், உறைந்த ஐஸ்கட்டிகளை முழுமையாக அகற்ற முடியும். 

இதையும் படியுங்கள்:
அம்பானி வீட்டு கல்யாணத்தில் பரிமாறப்பட்ட தெரு உணவுகள்… அப்படி என்ன ஸ்பெஷல்? 
Tips to Properly Maintain Fridge in Rainy Season!

மழைக்காலங்களில் வீட்டுக்கு அதிகப்படியான மின்சாரம் வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் குளிர்சாதனப் பெட்டிக்கு ஒரு தனிப்பட்ட ஸ்டெபிலைசர் பயன்படுத்தவும். இது மின்விநியோகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளில் இருந்து குளிர்சாதனப் பெட்டியை பாதுகாக்கும். 

வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களது குளிர்சாதனப் பெட்டியை சர்வீஸ் செய்யுங்கள். இது திடீரென ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் பழுகுகளில் இருந்து ஃபிரிட்ஜை பாதுகாக்கும். 

மழைக்காலங்களில் இத்தகைய விஷயங்களை நீங்கள் முறையாக கடைபிடித்தால், எந்த பிரச்சனைகளும் இன்றி உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com