துணிகளில் உள்ள கறைகளை எளிதாக நீக்க சில டிப்ஸ்! 

Tips to remove stains from clothes easily!
Tips to remove stains from clothes easily!
Published on

நம் அன்றாட வாழ்க்கையில் துணிகளில் கரைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. தேநீர், காப்பி உணவு வகைகள் என பல விஷயங்கள் துணிகளில் விழுந்து கரைகளை ஏற்படுத்தும். இது தவிர நாம் வெளியே செல்லும்போது துணியில் கறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில கறைகள் எளிதில் நீங்கிவிடும் என்றாலும், சில கறைகள் விடாப்பிடியாக அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட கரைகளைப் பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம்! இந்தப் பதிவில் துணிகளில் உள்ள கறைகளை எளிதாக நீக்கும் சில வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.‌

கறைகளை நீக்குவதற்கு முன்: 

கறைகளை நீக்குவதற்கு முன் அது எந்த வகை கறை என்பதை அறிவது முக்கியம். எண்ணெய் கறை, ரத்த கறை, மை கறை என ஒவ்வொரு வகை கரைக்கும் தனித் தனி நீக்கும் முறைகள் உள்ளன. 

அடுத்ததாக நீங்கள் கவனிக்க வேண்டியது துணியின் வகை. எல்லா துணிகளையும் நீங்கள் ஒரே மாதிரியாக துவைக்க முடியாது. ஏனெனில், சில துணிகளை அழுத்தி தேய்த்தாலே அவை கிழிந்துவிடும் அளவுக்கு இருக்கும். எனவே கறையை நீக்குவதற்கு முன் துணியின் பராமரிப்பு லேபிளை சரிபார்க்கவும். 

கறை பட்டவுடன் உடனடியாக அதை நீக்குவது முக்கியம். ஏனெனில் கரையை அதிகமாக காய விடுவதால், அதை நீக்குவது கடினமாகிறது. 

பொதுவான கறைகளை நீக்கும் முறைகள்: 

எண்ணெய் கறைகள்: எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு பேக்கிங் சோடா, கார்ன் ஸ்டார்ச் அல்லது டிடர்ஜென்ட் போன்ற உறிஞ்சும் பொருட்களைப் பயன்படுத்தலாம். அவற்றை கரையின் மீது தடவி சிறிது நேரம் ஊறவைத்த பின்னர் துவைத்தால், எண்ணெய் கறை போய்விடும். 

ரத்தக் கறைகள்: ரத்தக் கறைகளை நீக்குவதற்கு குளிர்ந்த நீரில் துணியை துவைக்க வேண்டும். பின்னர் ஹைட்ரஜன் பெராக்ஸைட் அல்லது என்சைம் அடிப்படையிலான கறை நீக்கியைப் பயன்படுத்தவும். 

மை கறைகள்: மை கறையை நீக்குவதற்கு எத்தனால் அல்லது ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். அவற்றை கரையின் மீது தடவி ஒரு துணியால் துடைத்து எடுக்கவும். 

இதையும் படியுங்கள்:
இப்படி செய்து பாருங்கள் எலுமிச்சை இனிப்பு ஊறுகாயை!
Tips to remove stains from clothes easily!

பழக் கறைகள்: எலுமிச்சை சாறு அல்லது வினிகர் பயன்படுத்தி பழக்கரைகளை எளிதாக நீக்கலாம். அவற்றை கறையின் மீது தேய்த்து சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் துவைத்தால் பழக்கறைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 

மஞ்சள் கரை: மஞ்சள் கறையானது சூரிய ஒளியில் துணியை நன்கு காய வைத்தால் ஓரளவுக்கு போய்விடும். அல்லது ஹைட்ரஜன் பெராக்ஸைட் பயன்படுத்தியும் மஞ்சள் கறையை நீக்கலாம். 

இது தவிர மற்ற எந்த கறையாக இருந்தாலும் பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு இவற்றைப் பயன்படுத்தி எளிதாக நீக்க முடியும். எனவே, இனி உங்கள் துணியில் ஏதேனும் கறை பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். மேலே குறிப்பிட்ட விஷயங்களை பயன்படுத்தி எளிதாக அவற்றை  நீக்கிவிட முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com