ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துதா? இத செஞ்சா ஸ்பீடு சும்மா அள்ளும்!

Tips to Speed Up a Slow Running Fan in Summer
Tips to Speed Up a Slow Running Fan in Summer

கோடை வெயில் கொளுத்தும் வேளையில், வீட்டில் ஏசி இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு சீலிங் ஃபேன் கட்டாயம் இருக்க வேண்டும். இது நமது உடலை ஓரளவுக்கு குளிர்ச்சி படுத்த அவசியமான ஒன்று. இருப்பினும் மின்விசிறியை நாம் முறையாக பராமரிக்காததால், அது மெதுவாகவே சூழலும். நீங்களும் அதை வேகமாக சுழல வைக்க ஏதேதோ செய்வீர்கள், ஆனால் எதுவும் சரிப்பட்டு வராது. இந்த பதிவில் நான் சொல்லப்போகும் விஷயங்களை முயற்சித்து பாருங்கள், ஆமை வேகத்தில் சுழலும் உங்கள் சீலிங் ஃபேன், ஜெட் வேகத்தில் சீறிப்பாயும். 

  • சுத்தம் செய்யுங்கள்: சீலிங் ஃபேனின் வேகத்தைக் கூட்டுவதற்கு முன்பு முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். அதில் படிந்து கிடக்கும் தூசியை துடைத்தாலே ஓரளவுக்கு நன்றாக சுற்ற ஆரம்பிக்கும். எனவே அவ்வப்போது ஃபேனை நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஃபேனை சுத்தம் செய்வதற்கு முன்பு மின் இணைப்பை துண்டித்து விட்டு, துணி பயன்படுத்தி அதன் இறக்கை மற்றும் மோட்டாரை சுத்தம் செய்யலாம். இது அதன் இயக்கத்தை சற்று அதிகரிக்கும். 

  • கெபாசிட்டரை சரிபார்க்கவும்: சீலிங் ஃபேனில் வேகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அனைவருமே முதலில் சரி பார்க்க வேண்டியது அதன் கெபாசிட்டரைதான். ஏனெனில் இதுதான் ஃபேனின் வேகத்தை நிர்ணயிக்கும் கருவியாகும். பெரும்பாலான சமயங்களில் கெபாசிட்டர் மாற்றினாலே பேன் வேகமாக ஓட ஆரம்பித்து விடும். எனவே முதலில் உங்களது ஃபேன் கெப்பாசிட்டர் நன்றாக இருக்கிறதா என சரி பார்த்து, புதிதாக மாற்றி விடுங்கள். 

  • ஆயில் போடவும்: ஃபேன் மோட்டார்களில் பொருத்தப்பட்டிருக்கும் பியரிங்கில் காலப்போக்கில் அழுக்கு மற்றும் தூசி குவிந்து, ஃபேன் மெதுவாக ஓட வழி வகுக்கலாம். எனவே அதை சரி பார்த்து, பியரிங் ஆயில் விடவும். ஒருவேளை பியரிங் பழுதாகி இருந்தால், கடையில் கொடுத்து புதிதாக மாற்றுவது நல்லது. 

  • ஃபேனை சரியான இடத்தில் வைக்கவும்: ஃபேனின் செயல்திறன் அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் வகையில் மின்விசிறி சரியான நிலையில் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். குறிப்பாக வெளியே இருந்து குளிர்ந்த காற்றை இழுப்பதற்கு ஜன்னலுக்கு நெருக்கமாக மின்விசிறியை வைக்கவும். மேலும் சீலிங்கில் இருந்து குறைந்தது இரண்டு அடி இடைவெளி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
AC ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? 
Tips to Speed Up a Slow Running Fan in Summer

மேலே கூறிய எல்லா விஷயங்களையும் முயற்சித்தும் நீங்கள் எதிர்பார்த்தபடி ஃபேன் வேகமாக சுழலவில்லை என்றால், வேறு ஒரு நல்ல மின்விசிறி வாங்குவது நல்லது. இப்போதெல்லாம் அதிக அம்சங்களுடன் கூடிய சிறந்த மின்விசிறிகள் வருகின்றன. மேம்படுத்தப்பட்ட மோட்டார், ரிமோட், லைட் என எல்லா அம்சங்களும் அதில் இருக்கின்றன. மின்சாரக் கட்டணத்தை குறைக்க BLDC ஃபேன்களைத் தேர்வு செய்வது நல்லது. எனவே சந்தையில் கிடைக்கும் பல்வேறு ஃபேன் மாடல்களை ஆராய்ந்து பார்த்து, உங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுக்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com