
நாடு முழுவதும் தற்போது நவீன குளியலறை, வெஸ்டர்ன் டாய்லெட் கலாச்சாரம் பரவி வருகிறது. இதனால் பலரது வீடுகளிலும் இந்த முறையையே பின்பற்றி வருகின்றனர். புதிதாக வீடு கட்டும் அனைவருமே இண்டீரியர் டிசைன் உள்ளிட்ட புதிய அம்சங்களுடனே வீடு கட்டுகின்றனர்.
அதில், வெஸ்டர்ன் டாய்லெட்டில் உள்ள ப்ளஷில் 2 பட்டன்களை பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?
இணையத்தில் அடிக்கடி பொது அறிவு சார்ந்த கேள்விகள் உலாவி வருகின்றன. அதில் பதில் தெரியாமல் நெட்டிசன்கள் இந்த கேள்விகளை பொது இடத்தில் விட்டு விடுகிறார்கள். அப்படி தான் இந்த கேள்வியும் உலாவி கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த கழிவறையில் ஏன் 2 பட்டன்கள் உள்ளன என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..
கழிப்பறையில் உள்ள 2 ப்ளஷ் பட்டனில், பெரிய ஃப்ளஷ் பட்டனும் ஒரு சிறிய பட்டனும் இருக்கும். இந்த இரண்டில், நாம் ஒரு பொத்தானை அல்லது இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் போதும். ஆனால் மற்றொன்று உண்மையில் என்ன செய்கிறது என்பது பலருக்குத் தெரியாது? மற்றொரு பொத்தான் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
நவீன கழிப்பறைகளில் இதுபோன்ற இரண்டு ஃப்ளஷ் பட்டன்களில் ஒன்று வெளியேறும் வால்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய பொத்தானை அழுத்தினால் சுமார் 6 லிட்டர் தண்ணீர் வெளியேறும், சிறிய பொத்தானை அழுத்தினால் 3 முதல் 4.5 லிட்டர் தண்ணீர் வெளியேறும்.
சில அறிக்கைகளின்படி, ஒரு வீட்டில் இரட்டை ஃப்ளஷ் இருந்தால், ஆண்டு முழுவதும் சுமார் 20,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். இரட்டை ஃப்ளஷ் நிறுவல் வழக்கமான ஃப்ளஷை விட விலை அதிகம், ஆனால் அது உங்களுக்கு நிறைய தண்ணீரை மிச்சப்படுத்தும். மேலும் இது உங்கள் தண்ணீர் கட்டணத்தையும் குறைக்கும். இதனால் இனி இது போன்ற கழிப்பறையை பயன்படுத்தும் போது, இதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான தண்ணீருக்கு ஏற்ற மாதிரி பட்டனை அழுத்தலாம். இந்த தகவல் பெரிதளவு யாருக்கும் தெரிந்திருக்காது. இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்களின் அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.