AC Cleaning Tips: உங்க ஏசியை நீங்களே சுத்தம் செய்யலாமே! 

AC Cleaning Tips.
AC Cleaning Tips.
Published on

கோடை வெயில் தொடங்கிவிட்டதால், வெப்பத்திற்கு எதிராகப் போராடும் நேரம் இது. இதுபோன்ற வெப்பமான காலங்களில் வீட்டின் உட்புற சூழலை பராமரிக்க ஏர் கண்டிஷனர் அவசியம். ஏசி சிறப்பாக வேலை செய்ய அவற்றை பராமரிப்பது முக்கியம். இந்த பதிவில் ஏசி சீராக இயங்க வைக்க உதவும் சில பயனுள்ள கிளீனிங் டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம். 

மின்சாரத்தை அணைக்கவும்: நீங்கள் உங்கள் ஏர் கண்டிஷனரை சுத்தம் செய்யத் தொடங்குவதற்கு முன் அதற்கான மின் விநியோகத்தை முதலில் அணைக்க வேண்டியது அவசியம். இதன் மூலமாக உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மின் விபத்துக்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. உங்கள் ஏசி யூனிட்டின் சர்க்யூட் பிரேக்கரை ஆப் செய்த பின்னர் சுத்தம் செய்யத் தொடங்கவும். 

ஏர் பில்டர்களை சுத்தம் செய்யவும் அல்லது மாற்றவும்: உங்கள் ஏர் கண்டிஷனரின் காற்றின் தரம் மற்றும் செயல்திறனை பராமரிப்பதில் ஏர் பில்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலப்போக்கில் இந்த பில்டர்களில் தூசி அழுக்கு மற்றும் பிற குப்பைகள் சேர்ந்து, காற்றோட்டத்தைத் தடுக்கிறது. இதனால் குளிரூட்டும் செயல்திறன் குறைகிறது. நீங்கள் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏர் பில்டர்களை சுத்தம் செய்ய வேண்டியது பரிந்துரைக்கப்படுகிறது. 

வெளிப்புற யூனிட்டை சுத்தம் செய்யவும்: உங்கள் ஏசியின் வெளிப்புற யூனிட்டை சுற்றியுள்ள அழுக்குகள், குப்பைகள் போன்றவற்றை சுத்தம் செய்யவும். மேலும் அதன் உள்ளே ஏதும் பறவைகள், விலங்குகள் கூடு கட்டி இருந்தால் அவற்றையும் நீக்கவும். ஏனெனில் வெளிப்புற யூனிட்டை சுற்றி குப்பைகள் இருந்தால் அது காற்றோட்டத்தைத் தடுத்து செயல்திறனை பாதிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
Removing Sun Tan: முகக்கருமையை நீக்குவதற்கான சில எளிய முறைகள்! 
AC Cleaning Tips.

தண்ணீரை வெளியேற்றும் Drain Pipe சுத்தம் செய்யவும்: ஏசி உற்பத்தி செய்யும் அதிகப்படியான ஈரப்பதத்தை வெளியேற்றுவதற்கு கண்டன்சேட் Drain Pipe பொருத்தப்பட்டிருக்கும். காலப்போக்கில் இவற்றில் குப்பைகள், தூசி, பாசி போன்றவை படிந்து, நீர் வெளியேற்றத்தைத் தடுக்கலாம். இது ஏசி யூனிட்டில் நீர்க்கசிவு மற்றும் மோசமான குளிர்ச்சிக்கு வழிவகுக்கும். 

தொழில்முறை பராமரிப்பு அவசியம்: ஏசி அதிகமாக ஓடினாலும் ஓடவில்லை என்றாலும் அதற்கு முறையான தொழில்முறை பராமரிப்பு அவசியம். எனவே குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறை நன்கு பயிற்சி பெற்ற ஏசி டெக்னீசியனை அழைத்து உங்கள் ஏசி யூனிட் ஆய்வு செய்து, ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் சரி செய்து கொள்ளுங்கள். இத்தகைய தொழிலமுறை பராமரிப்பு ஏசியின் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, விலை உயர்ந்த பழுதுகள் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com