

இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் தங்கள் உரையாடலுக்கு புதுப்புது ஆங்கில வார்த்தைகளைக் கண்டுபிடித்து உரையாடுகிறார்களாம். என்னப்பா சொல்றே! புது வார்த்தைகளா? (modern slang) சொல்லு கேட்போமே!
மொழி என்பது ஒருவர் மற்றவருக்கு தொடர்பு சாதனமாக உதவுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த மொழியில் அதுவும் ஆங்கிலத்தில் புதுப்புது வார்த்தைகள் கண்டுபிடித்து உரையாடுகிறார்கள் என்றால்….
”நிறுத்து! நிறுத்து! முதல்ல என்னென்ன வார்த்தைகள் சொல்லு கேட்க ஆர்வமாய் இருக்குப்பா!
”ஏழு வார்த்தைகள் என்ன ஏழு ஸ்வரம் மாதிரியா?"
"ஆமாம்பா! சீக்கிரமா சொல்லேன்! என் தோழிக்கு அதை வாட்ஸப்க்கு பகிரணும்பா!"
1. SUS- SUSPICIOUS OR SKETCHY
SUSPICIOUS என்ற வார்தையின் சுருக்கமே அந்த வார்த்தை. அதாவது ஒருவர் நம்பகத்தன்மையற்றவர் என சந்தேகப்பட்டால், அவரைக் குறிப்பிடும் ஷார்ட் வார்த்தையாம்! ஒருவரின் நடவடிக்கை வித்தியாசமாக தென்பட்டால் கூட அவரை இப்படி அழைக்கலாம்.
2. GOAT - GREATEST OF ALL TIME
ஒருவர் எப்பொழுதும் நல்ல செயல்களையே செய்கிறார், அல்லது எளியோருக்கு உதவும் மனப்பாங்கைக் கொண்டிருக்கிறார் என்றால் அவரை GOAT என அழைக்கலாம். GOAT என புகழ்ந்தால் வேறு அர்த்தமாக எடுத்துக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டால்? புகழ்வதற்கு முன்பு சிறிய விளக்கம் தந்து விட வேண்டியதுதான்.
3. FAM – FAMILY OR CLOSE FRIENDS
தற்போதைய டிஜிட்டல் உலகமான சோஷியல் மீடியாக்களில் குடும்பத்தினரும் மற்றும் நெருங்கிய நண்பர்களை இப்படி அழைக்கிறார்களாம். இப்படி அழைத்தால், இன்னும் நெருக்காகும் என நம்புகிறார்கள் இன்றைய இளைஞர்கள்!
4. LIT- EXCITING OR AMAZING
எதாவது குடும்ப விழா, அல்லது பள்ளி விழா அல்லது நிகழ்ச்சி நடந்து, அது மிகவும் சிறப்பானதாக அமைந்து விட்டால் இந்த LIT என்ற வார்தையைக் கூறி நிகழ்ச்சி நடத்தியவர்களை மகிழ்ச்சிபடுத்தலாம்.
5. YOLO – YOU ONLY LIVE ONCE
ஒரு இளைஞன், ஏதாவது ஒரு சாதனை புரிந்து அதில் வெற்றி பெற ஊக்குவிக்கும் அருமையான வார்த்தையாக இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதிதீவிர சாதனையாளருக்கும், உடனடி அதிரடி நடவடிக்கை மேற்கொள்பவர்களும் இந்த வார்த்தைக்கு பொருத்தமானவர்களாம்.
6. TBH – TO BE HONEST
டிஜிட்டல் மீடியாக்கள் உரையாடல்களில் இந்த TBH – என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்துகிறார்களாம். அலுவலகத்தில், ஒர நபர் இன்னொரு நபருக்கு முக்கிய தகவல் பகிரும்போதும், தமது சொந்த கருத்தகளை அனுப்பும் பொழுதும் இந்த வார்த்தையை பிரயோகித்தல் சிறப்பு என்கிறார்கள் இளைஞர்கள்.
7. STAN – OVERZEALOUS FAN
ஒரு நபர் ஏதாவது ஒரு தலைவருக்கோ அல்லது திரைப்பட நடிக நடிகையருக்கோ அதிதீவர ஆதரவாளர் என காட்டிக்கொண்டால். அவரை இந்த வார்த்தைக் கொண்டு தாராளமாக அழைக்கலாம் என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். உதாரணமாக அஜீத்- விஜய் அல்லது ரஜினி ரசிகர்களுக்கு பொருத்தமானது என உறுதியாக சொல்கிறார்கள்.
இன்னும் நிறைய சுருக்க சொற்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். அதை மொழி பெயர்க்க எவராது அகராதியும் எழுதலாம்.
அது வரை… காத்திருப்போம்! வாசகர்களே!