சமையலறை சிங்க் கரையை நொடிப்பொழுதில் சுத்தம் செய்வதற்கான தந்திரங்கள்! 

Tricks to clean kitchen sink
Tricks to clean kitchen sink.
Published on

சமையலறையில் உள்ள சிங்க் கரைபடிந்து இருப்பது எல்லா வீடுகளிலும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். உணவுத் துகள்கள், கிரீஸ் மற்றும் சோப்பு நுரை போன்றவை சேர்ந்து காலப்போக்கில் கரைகளை உருவாக்கலாம். இதுபோன்ற கறைகள் பார்ப்பதற்கு மோசமாக இருப்பது மட்டுமின்றி, பாக்டீரியாக்களின் வாழ்விடமாகவும் இருக்கும். இந்த,ப் பதிவில் சில விரிவான மற்றும் எளிதான முறைகளைப் பின்பற்றி எப்படி சிங்க் கரையை நீக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

சிங்க் கரையை சுத்தம் செய்ய சில எளிய முறைகள்: 

  • வினிகர்: வெள்ளை வினிகரை 1:1 என்கிற விகிதத்தில் தண்ணீரில் கலந்து கரை படிந்திருக்கும் இடத்தில் ஊற்றவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு மென்மையான துணியால் தேய்த்தால் கரை மொத்தமும் வந்துவிடும். பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவினால் சுத்தமாக மாறிவிடும். 

  • பேக்கிங் சோடா: சிறிதளவு பேக்கிங் சோடாவை ஈரமான துணியில் தொட்டு கரை படிந்திருக்கும் பகுதிகளில் தேய்த்து விடவும். இதை அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் விட்ட பிறகு, நன்கு தேய்த்து கழுவினால் கரை மொத்தமும் நீங்கிவிடும். 

  • எலுமிச்சை: எலுமிச்சையை பாதியாக வெட்டி கரை பணிந்திருக்கும் இடத்தில் தேய்த்த பிறகு, 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். அது சிங்க்-ல் உள்ள அழுக்குகளுடன் வினைபுரிந்து, எல்லா கறைகளையும் நீக்கிவிடும். 

  • உப்பு: சிங்க் கரையை நீக்குவதற்கு உப்பு ஒரு எளிதான வழியாகும். கரை அதிகமாக இருக்கும் இடத்தில் உப்பை போட்டு நன்கு தேய்த்தால், கரை இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். 

  • டூத் பேஸ்ட்: நீங்கள் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் சிங்க் கரையை நீக்கலாம். சிறிதளவு பேஸ்ட்டை எடுத்து சிங்கிள் கறை படிந்திருக்கும் பகுதிகளில் நன்றாக தேய்த்து கழுவினால், 5 நிமிடத்தில் சிங்க் பலபலவென மாறிவிடும். 

இதையும் படியுங்கள்:
சிறிய திறந்த வகை தென்னிந்திய சமையலறை வடிவமைப்புக்கான சில யோசனைகள்!
Tricks to clean kitchen sink

இது தவிர பல வகையான சிங்க் கிளீனர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தியும் சிங்கை சுத்தப்படுத்த முடியும். சிங்க் கரையை சுத்தம் செய்ய கடுமையான ரசாயனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் கைகளைப் பாதுகாக்க ரப்பர் கையுறைகளை அணிந்த பிறகு சிங்கை சுத்தம் செய்யுங்கள். 

நீங்கள் நினைப்பது போல சமையலறை சிங்க் கரையை சுத்தம் செய்வது ஒன்றும் கடினமான வேலை அல்ல. மேலே குறிப்பிட்ட எளிய முறைகளைப் பயன்படுத்தி உங்கள் சிங்கை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com