வீட்டில் கரையான் பிரச்சனையை சமாளிக்கும் தந்திரங்கள்! 

termite
Tricks to deal with termite problems at home!
Published on

கரையான் என்பது மரத்தை அரித்து சாப்பிடும் பூச்சிகள். இவை வீட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை இவற்றால் அதிகம் பாதிக்கப்படலாம். கரையான்கள் வீட்டில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பெரும் பொருட்சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்தப் பதிவில் வீட்டில் உள்ள கரையான் பிரச்சனையை சமாளிக்கும் சில தந்திரங்கள் பற்றி பார்க்கலாம். 

கரையான் இருப்பதை எப்படி கண்டறிவது? 

வீட்டில் கரையான்கள் இருப்பதை சில அறிகுறிகள் மூலமாக நாம் கண்டறியலாம். மரச்சாமான்களில் சிறிய துளைகள் அல்லது சேதங்கள் இருக்கும். மென்மையான மரப்பொடியை வீட்டு தரையில் காண்பீர்கள். கரையான் புற்றுகள் வீட்டு சுவர்களில் அல்லது தரையில் இருக்கும். சிறகுகள் கொண்ட கரையான்கள் வீட்டில் அவ்வப்போது பறக்கும். 

கரையான் பிரச்சனையை சமாளிக்கும் தந்திரங்கள்: 

வீட்டை கரையான்களிடமிருந்து பாதுகாக்க முதலில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, மரச்சாமான்களை ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது, வீட்டை காற்றோட்டத்துடன் வைத்துக் கொள்வது போன்றவற்றை கவனிக்க வேண்டும். புதிய மரச் சாமான்கள் வாங்கும்போது அவை கரையான்கள் பாதிக்காத வண்ணம் மேற்பூச்சு கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

ஒருவேளை உங்கள் வீட்டில் கரையான்கள் இருந்தால், வேப்ப எண்ணையை கரையான்கள் பாதித்த இடங்களில் தடவுங்கள். அல்லது பூண்டை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை கரையான்கள் இருக்கும் இடங்களில் தெளிக்கலாம். மிளகுத்தூளை கரையான்களின் புற்றில் தூவுவது மூலமாகவும் அவற்றை கட்டுப்படுத்த முடியும். 

இதையும் படியுங்கள்:
மனித முகம் கொண்ட பூச்சி பற்றி தெரியுமா? அடேங்கப்பா! 
termite

அடுத்தபடியாக, கடைகளில் கிடைக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கரையான்கள் பாதித்த இடத்தில் தெளியுங்கள். உங்களால் இவற்றை முறையாக செய்ய முடியவில்லை எனில், பூச்சிகளை கட்டுப்படுத்தும் நிறுவனத்தின் உதவியை நாடி உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது. 

உங்கள் வீட்டில் கரையான் பிரச்சனை ஏற்பட்டால் எதற்கும் பயப்படாமல் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை சமாளிக்க முயற்சி செய்யுங்கள். முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கரையான் பிரச்சனை ஏற்படாமல் வீட்டு மரச்சாமான்களை பாதுகாக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com