என்றும் இளமையாய் இருக்க இருபது வழிகள்!

Twenty ways to stay young forever
Twenty ways to stay young foreverhttps://tamil.webdunia.com

ன்றென்றும் இளமையாக இருக்க எல்லோருக்கும் ஆசைதான். அதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளில் கண்டறிந்து வெளியிட்ட இளமைக்கான ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

* அதிகமாக தண்ணீர் குடியுங்கள். உடலில் நீர் அளவு குறைந்தால் சருமத்தில் சுருக்கங்கள் விழும்.

* ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உணவில் ‘கலோரி’ குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்துக்கு உணவிலுள்ள நார்ச்சத்து அவசியம். எனவே, நார்ச்சத்து நிறைந்த பதார்த்த வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* எண்ணெய்களில் வறுத்த உணவுகளை முடிந்த மட்டும் தவிருங்கள். உப்பும், சர்க்கரையும் மிகவும் குறைவாக சாப்பிடுங்கள்.

* வாரம் ஒருமுறை அசைவ உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை நன்றாக வேக வைத்ததை மட்டுமே சாப்பிட வேண்டும்.

* வேகவைத்த காய்கறி சாலட்களை சிற்றுண்டி போல் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.

* ஒரு நாளைக்கு மூன்று முறை மொத்தமாக சாப்பிடுவதை விட, நான்கைந்து வேளைகள் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது ஆரோக்கியம்.

* உண்ணும் உணவுகளில் இருந்து உடம்பிற்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்க வேண்டும். ஆகவே, வைட்டமின் சத்து அதிகம் உள்ள பால், முட்டை, மீன் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சாப்பாட்டிற்கு அடுத்தபடியாக உடற்பயிற்சி அவசியம். நடப்பது, நீந்துவது, டென்னிஸ் விளையாடுவது என்று ஏதாவது ஒன்றை தினமும் செய்து வர வேண்டும்.

* ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* நிறைய தூங்குங்கள். மதிய நேரத்தில் சாப்பிட்ட பிறகு குட்டி தூக்கம் போடுங்கள். அது உடலுக்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தரும்.

* எடையை அதிகரிக்க விடாமல், குறைவாக தைத்துக்கொள்ள வேண்டும்.

* எடையை குறைக்க விரும்பும்போது, மிதமான பத்தியமிருக்க வேண்டும். அதிகளவில் பத்தியம் இருந்தால் ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படும்.

* புகை பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக முகத்தில் சரும சுருக்கம் ஏற்படும். அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

* வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
அறியாமையை எண்ணி அவமானப்பட வேண்டாம்!
Twenty ways to stay young forever

* உங்கள் பிரச்னைகளை ஓரமாக வைத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சியுங்கள்.

* அடிக்கடி மனம் விட்டு சிரிக்க முயற்சி செய்யுங்கள்.

* வீட்டில் செல்ல பிராணிகளை வளர்த்து நேரம் கிடைக்கும்போது அவற்றை சிறிது நேரம் கொஞ்சி மகிழுங்கள்.

* எழுதுவது, படம் வரைவது, இசைக்கருவிகள் மீட்டுதல் என்று ஏதாவது ஒரு ஹாபியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* ஆண்கள் மற்றும் பெண்கள் மேக் அப் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கெமிக்கல் கலந்த பொருட்களை தவிருங்கள்! தலைக்கு பெராக்சைடு கலக்காத சாயங்களைப் பூசுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com