ஊஞ்சலின் வகைகள் மற்றும் ஊஞ்சலாட்டத்தின் நன்மைகள்!

Types and benefits of swing
Types and benefits of swing
Published on

ஞ்சல் ஆடும்போது கை, கால்கள், முதுகு போன்ற உடல் பாகங்கள் இயக்கம் பெறுகின்றன. இதனால் மூட்டுகள் நன்கு செயல்படும். சரியான உடல் சீரமைப்பையும், இயல்பான சுறுசுறுப்பையும் வளர்க்க இது உதவும். ஊஞ்சல் ஆடுவதால் உடல் எளிதாக ஆக்டிவாகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு. ஊஞ்சல் ஆடும்போது உடலின் சுழலும் தன்மை மனதை தளரச்செய்து அமைதியைக் கொண்டு வருகிறது. தொடர்ந்து ஊஞ்சல் ஆடுவது மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியை வழங்குகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மன சாந்தியை வழங்குவதில் ஊஞ்சல் ஆடுவது உதவியாக இருக்கும்.

ஊஞ்சல் ஆடுவதால் குழந்தைகளின் உடல் தசைகளும் மூளை செயல்பாடும் மேம்படும். இது உடல் மற்றும் மூளையை ஒருங்கிணைத்து இயக்கிக்கொள்ள உதவுகிறது. அவர்களின் மன சங்கடம் மற்றும் உடல் சோர்வு இதனால் குறைந்து, மகிழ்ச்சியுடன் செயல்பட உதவும். ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த ஊஞ்சலின் மென்மையான இயக்கங்கள் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதன் மூலம் உறவுகளை வலுப்படுத்த முடியும்.

ஊஞ்சலின் வகைகள்:

1. பொது இட ஊஞ்சல்கள்: பூங்காக்களில் காணப்படும் ஊஞ்சல்கள், வீட்டுக்குள் மாட்டி பயன்படும் குழந்தை ஊஞ்சல்கள். பாதுகாப்புக்காக பெல்ட் இணைக்கப்பட்ட நவீன வகை ஊஞ்சல்கள்.

2. விளையாட்டு ஊஞ்சல்கள்: ஸ்கூல் அல்லது ஸ்போர்ட்ஸ் மைதானங்களில் உள்ள ஊஞ்சல்கள். பல அடி உயரத்தில் பாயும் வகை ஊஞ்சல்கள்.

3. வீட்டில் பயன்படுத்தும் ஊஞ்சல்கள்: மரத்தால் செய்யப்பட்ட ஊஞ்சல்கள், கம்பி ஊஞ்சல்கள், கம்பளி அல்லது துணியால் செய்யப்பட்ட ஹாம்மாக் (hammock) வகை ஊஞ்சல்கள்.

4. பழங்கால ஊஞ்சல்கள்: நாட்டுப்புற வீடுகளில் இருக்கும் பெரிய மர ஊஞ்சல்கள், கோயில்களில் காணப்படும் சடங்கு ஊஞ்சல்கள்.

5. பக்தி மற்றும் ஆன்மிக ஊஞ்சல்கள்: கிருஷ்ண ஜயந்தி போன்ற விழாக்களில் பகவானுக்கு ஊஞ்சல் அலங்காரம், கோயில்களில் உள்ள அழகிய ஆராதனை ஊஞ்சல்கள்.

6. தொழில்நுட்ப ஊஞ்சல்கள்: பெல்ட்-டிரைவ் முறை சார்ந்த யந்திர ஊஞ்சல்கள், விளையாட்டுத் தளங்களில் காணப்படும் எலக்ட்ரானிக் ஊஞ்சல்கள்.

ஊஞ்சல் ஆடும் நேரத்தைத் தேர்வு செய்வது:

காலை நேரம்: சூரிய ஒளி அதிகமாக வரும் நேரத்தில் ஊஞ்சல் ஆடுவது உடல் புத்துணர்வை ஏற்படுத்தும். பசுமை சூழலில் ஊஞ்சல் ஆடுவது மன அமைதியும் ஆற்றலும் தரும். இதுவே, உடல் இயக்கத்தை அதிகரித்து, சுறுசுறுப்பான நாளைத் தொடங்க உதவும்.

மாலை நேரம்: வேலை முடிவில் அல்லது பள்ளி முடிந்த பின், மாலையில் ஊஞ்சல் ஆடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். மிதமான குளிர் காற்றில் ஊஞ்சலில் அமர்ந்தால், மனதிற்கு சுகத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் தொடர்பு திறன்களை மேம்படுத்த உதவும் 6 சிறந்த வழிகள்!
Types and benefits of swing

தியானம் அல்லது ஓய்வு நேரம்: தியானம் செய்யும் முன் அல்லது செய்யும்போது மெதுவாக ஊஞ்சல் ஆடுவதால் மனநிலை அமைதியாகும்.

தூக்கத்துக்கு முன்: சிறிய குழந்தைகள் அல்லது பெரியவர்களும் ஊஞ்சலில் சில நிமிடங்கள் அமர்ந்து ஆடினால் தூக்கம் நன்கு வரும்.

ஓய்வு நேரம்: பணி அல்லது கல்வியில் இருந்து விடுமுறை நேரத்தில் ஊஞ்சல் ஆடுவது புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியைத் தரும்.

குறிப்பு: உணவு உண்டதும் ஊஞ்சல் ஆடுவது கூடாது. ஏனெனில், அது ஜீரணத்தை பாதிக்கக்கூடும். மிக அதிகமாக மற்றும் வேகமாக ஊஞ்சல் ஆடுவது தலைச்சுற்றல் அல்லது வலியைக் கொடுக்கக்கூடும்; மிதமான இயக்கம் சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com