பாரம்பரிய பொஹேமியன் விளக்குகள் பெரும்பாலும் ஒரு தனித்துவமான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாணியை பிரதிபலிக்கின்றன. அவை பிரகாசமான வண்ணங்கள், சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு கலாசார தாக்கங்களின் கலவையால் வகைப்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய பொஹேமியன் விளக்குகளில் பொதுவாகக் காணப்படும் சில முக்கிய அம்சங்கள் மற்றும் அவற்றின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.
1. சர விளக்குகள் (Chandeliers): பெரும்பாலும் வண்ணமயமான கண்ணாடி மணிகள், படிகங்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட போஹேமியன் சர விளக்குகள் ஒரு அறைக்கு விண்டேஜ் அழகையும் கலைத் திறனையும் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பழங்கால மொராக்கோ, துருக்கி மற்றும் இந்திய பாணிகளை இணைத்து வடிவமைக்கப்படுகின்றது. இவை தனித்துவமான மற்றும் வசீகரிக்கும் வண்ணம் இருக்கின்றன.
இவற்றின் பிரேம்கள் பெரும்பாலும் விரிவான ஃபிலிகிரீ அல்லது சிக்கலான வடிவங்களுடன் உலோகத்தால் செய்யப்படுகின்றன. இவை பிரம்பு, மூங்கில் அல்லது மரம் போன்ற இயற்கை பொருட்களைக் கண்டு உருவாக்கப்படுகின்றன. பல அடுக்குகளை கொண்டிருக்கும் போஹேமியன் சரவிளக்குகளின் வடிவமைப்பு, ஒரு அறையின் வசதியான, சூடான, பரவலான ஒளியை வீசி ஒரு மாயாஜால சூழலை உருவாக்குகிறது.
2. டேபிள் விளக்குகள்: இவை துடிப்பான, வண்ணமயமான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் வண்ணக் கண்ணாடித் துண்டுகள், மொசைக் வடிவங்கள் அல்லது வர்ணம் பூசப்பட்ட விவரங்களை உள்ளடக்கியது. கண்ணாடி, உலோகம், மரம் மற்றும் துணி போன்ற பொருட்களின் கலவையால் ஆனவை. போஹேமியன் டேபிள் விளக்குகளின் தளங்கள் பெரும்பாலும் அலங்கரிக்கப்பட்ட உலோக வேலைப்பாடு, செதுக்கப்பட்ட மரம் அல்லது விரிவான மட்பாண்டங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
3. தொங்கும் விளக்குகள் அல்லது சுவரில் பொருத்தப்பட்ட விளக்குகள் (Hanging lanterns or wall-mounted lanterns): உலோகம் மற்றும் கண்ணாடியால் செய்யப்படும் இவை மொராக்கோ அல்லது துருக்கிய பாணி வேலைப்பாடுடன் இருக்கும். இந்த விளக்குகள் பெரும்பாலும் விரிவான ஃபிலிகிரி வேலைகளைக் கொண்டுள்ளன மற்றும் சூடான, பரவலான ஒளியை வெளியிடுகின்றன.
4. மென்மையான சர விளக்குகள் (String lights): தேவதை விளக்குகள் என அழைக்கப்படும் மென்மையான இந்த சர விளக்குகள் பெரும்பாலும் வசதியான மற்றும் விசித்திரமான சூழ்நிலையை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஜன்னல்கள், கண்ணாடிகள் அல்லது ஹெட்போர்டுகளைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.
இதில் உள்ள மினியேச்சர் பல்புகள் பொதுவாக சிறிய, குறைந்த வாட்டேஜ் பல்புகளைக் கொண்டிருக்கின்றன. அவை வெம்மையான வெள்ளை மற்றும் குளிர் வெள்ளை முதல் பல வண்ணங்களில் வருகின்றன. இது பல்வேறு அழகியல் விளைவுகளை தருகிறது. இதன் நெகிழ்வான மற்றும் இலகு ரக கம்பிகள் பொருட்களை சுற்றி வளைப்பது, போர்த்துவது அல்லது வடிவமைக்க எளிதாக இருக்கிறது. ஸ்டிரிங் விளக்குகளை பேட்டரிகள் அல்லது பிளக்-இன் அடாப்டர் மூலம் இயக்கலாம்.
5. பதக்க விளக்குகள் (Pendant Lights): பிரம்பு, மூங்கில் அல்லது பிற இயற்கைப் பொருட்களால் பதக்க விளக்குகள் செய்யப்படுகின்றன. வண்ணமயமான அலங்காரமான கண்ணாடித் துண்டுகளைக் கொண்ட இந்த விளக்குகள் ஒரு அறைக்கு அழகு சேர்க்கின்றன. இவை மொராக்கோ அல்லது துருக்கிய மொசை விளக்குகள் போல விரிவான வடிவங்களைக் கொண்டுள்ளன. அவை ஒளிரும்போது சிக்கலான ஒளி மற்றும் நிழல் விளைவுகளை உருவாக்குகின்றன.