இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை சிறிது நேரம் காற்றாட வைத்துவிட்டு தேனில் போட்டு இரண்டு மூன்று நாட்கள் ஊறவிடவும். தினமும் காலையில் எழுந்ததும் இதனை வெறும் வயிற்றில் இரண்டு துண்டுகள் சிறிது தேனுடன் சேர்த்து சாப்பிட ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரேனுக்கு சிறந்த மருந்தாகும்.
இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ரத்த நாளங்களில் ரத்தக் கட்டு ஏற்படாமல் அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு வராமல் பாதுகாக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு.
சிலருக்கு வயிறு உப்புச பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இதற்கு இந்த தேனில் ஊறிய இஞ்சியை சாப்பிட நல்ல குணம் தெரியும்.
ஆஸ்துமா எனப்படும் சுவாச பிரச்சனைக்கும் நல்லது.
மலச்சிக்கலுக்கும், செரிமான பிரச்சனைக்கும் சிறந்த தீர்வு இஞ்சியும் தேனும்தான்.
நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த இஞ்சி தேன் ஊறலை சாப்பிட்டு வரலாம்.
சளி, இருமலுக்கும், அடிக்கடி உடல் வலி வந்து அவதிப்படுபவர்களுக்கும் இந்த தேன் ஊறல் சிறப்பான மருந்தாகும்.
இதயம் ஆரோக்கியமாக செயல்படவும், புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடவும், மூட்டு வலி, வீக்கம், வாயு பிடிப்பு போன்ற அனைத்துக்கும் சிறந்தது இது.
இதனை நீண்ட நாட்கள் தொடர்ந்து உண்டுவர நரை திரை மூப்பு அணுகாது. உடல் அழகு பெறும். இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.
இதனை நிறைய அளவு செய்து வைத்து பயன்படுத்த முடியாது. சிறிது நாட்களில் புளித்த சுவை ஏற்படும். எனவே இதனை கொஞ்சம் கொஞ்சமாக செய்து வைத்து (15 நாட்களுக்கு ஒரு முறை) உண்ணலாம்.